இனி ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை ஒரு பெண்தான் ஏற்க வேண்டும்.. சொல்கிறார் பியர்ஸ் ப்ரோஸ்னன்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் ஒரு பெண்தான் நடிக்க வேண்டும் என நான்குமுறை அந்த கதாப்பாத்திரத்தில் நடித்த பியர்ஸ் ப்ரோஸ்னன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜேம்ஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் பிரான்சைஸின் 25வது படம் தற்போது தயாராகி வருகிறது.,

Its now time for a woman to do the role: James Bond actor Pierce Brosnan

இதில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இதுவரை இந்த படத்தில் நான் முறை 007 ரகசிய ஏஜென்ட் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த டேனியல் கிரெய்க்கு ஐந்தாவது முறையாக அந்த கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

இந்த படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி இங்கிலாந்திலும் ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவிலும் ரிலீஸ் ஆகிறது. "No Time to Die " என்ற தலைப்பில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் நான்கு முறை ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த பியர்ஸ் ப்ரோஸ்னன் தி ஹாலிவுட் ரிப்போட்டருக்கு பதிலளித்துள்ளார். அதில் கடந்த 40 ஆண்டுகளாக இவர்களைதான் ஜேம்ஸ் பாண்டில் பார்த்து வருகிறோம்.

இப்போது அந்த வழியில் இருந்து விலக வேண்டிய நேரம். அந்த இடத்தில் இப்போது ஒரு பெண்னை போட வேண்டும். அப்படி நடந்தால் அது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கும், உற்சாகமாக இருக்கும், என்றும் நான் நினைக்கிறேன், என்றும் பியர்ஸ் ப்ரோஸ்னன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X