இந்தக் கொரோனா இப்படி மாத்திடுச்சே.. வயலில் இறங்கி வசமாக நாற்று நட்ட ஹீரோயின்.. சூப்பர் அனுபவமாம்!

By

சென்னை: பிரபல நடிகை வயலில் நாற்று நட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் பலரை பலவிதமான புதிய முயற்சிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

இசை, பிற மொழிகளை கற்பது என்று தங்கள் நேரத்தை நடிகர், நடிகைகள் செலவழித்து வருகின்றனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 4 மாதமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், பன்வலில் உள்ள தனது பண்ணை வீட்டில் பொழுதை கழித்து வருகிறார். அவருடன் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், லுலியா வந்தூர் மற்றும் குடும்பத்தினர் இருக்கின்றனர். அங்கு சைக்கிளிங் செல்வது, குதிரைகளை கவனிப்பது, மரக் கன்று நடுவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

உடல் முழுவதும் சகதி

உடல் முழுவதும் சகதி

நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உடன் இணைந்து வீடியோ பாடலையும் ஷூட் செய்து, வெளியிட்டு இருந்தார் சல்மான். விவசாயத்திலும் ஆர்வம் காட்டி வரும் சல்மான் முற்றிலும் விவசாயியாகவே மாறி வயலில் நின்றபடி சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில், உடல் முழுவதும் சகதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

லுலியா வந்தூர்

லுலியா வந்தூர்

'Respect to all the farmers' என கேப்ஷன் கொடுத்து விவசாயிகளுக்கு ராயல் சல்யூட் வைத்தார் சல்மான் கான். அவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பாராட்டித் தள்ளினர். இந்நிலையில் சல்மான் கானின் பண்ணை வீட்டில் இருக்கும் நடிகை லுலியா வந்தூரும் வயலில் நாற்று நடும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

அவர் ஏற்கனவே அங்கு குதிரை சவாரி, மரம் நடும் போட்டோக்களை வெளியிட்டிருந்தார். இப்போது, நாற்று நடும் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில், 'எனது குழந்தை பருவத்தில், கோடை விடுமுறைகளை கிராமங்களில் கழித்தேன். எனது தாத்தா பாட்டிகளுக்கு உதவும் விதமாக, விதை விதைப்பது, விலங்குகளில் இருந்து நிலத்தைக் காப்பது போன்ற வேலைகளை ரசித்து செய்திருக்கிறேன்.

புது அனுபவம்

புது அனுபவம்

இதற்கு முன் நாற்று நட்டதில்லை. அதனால் இது எனக்கு புது அனுபவம். இது பற்றி எனது யூடியூப் சேனலில் இன்னும் விரிவாக பேச இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரொமானியாவைச் சேர்ந்த மாடலான லுலியா வந்தூர், இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். சல்மான் கான் இவரை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொண்டதாகவும் சில வருடங்களுக்கு பாலிவுட்டில் பரபரப்பு செய்தி பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X