ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து மிரட்டும் “அயர்ன் மாஸ்க்” தமிழில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: ஹாலிவுட் லெஜண்ட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து நடித்த "அயர்ன் மாஸ்க்" படம் இந்த மாதம் தமிழில் வெளியாகிறது.

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான இந்த படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட விருக்கிறது.

இந்த படத்தில் ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இருவரும் வித்யாசமான தோற்றத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு திரையரங்குகளில் ட்ரீட் கொடுப்பது நிச்சயம்.

அயர்ன் மாஸ்க்

அயர்ன் மாஸ்க்

இயக்குநர் ஒலெக் ஸ்டீப்சென்கோ இயக்கத்தில் ஜேசன் ஃபிளெமிங், சார்லஸ் டான்ஸ், ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடித்த அயர்ன் மாஸ்க் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியாகி பெரும் வசூலை வாரிக் குவித்தது.

தமிழில்

தமிழில்

கொரோனா காரணமாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த இந்த படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது.

என்ன கதை

என்ன கதை

டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை! இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை தமிழில் மகிழ்விக்க வருகிறார்கள்.

ஜாக்கி சான் மிரட்டல்

ஜாக்கி சான் மிரட்டல்

ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத்தை தமிழில் வெளியிடுகிறது. வயசனாலும் சிங்கத்தின் கர்ஜனை குறையாது என்பது போல ஸ்டன்ட்டில் பின்னி பெடலெடுத்துள்ளார் ஜாக்கி சான்.

அசத்தும் அர்னால்ட்

அசத்தும் அர்னால்ட்

டெர்மினேட்டர் படங்களில் மிரட்டிய அர்னால்ட் இந்த படத்தில் ஜாக்கி சான் உடன் நேருக்கு நேர் நின்று மோதும் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராகன் வரும் காட்சிகள் சண்டை காட்சிகள் என அனைத்தும் டிரைலரிலேயே பிரம்மிப்பை கிளப்புகின்றன. அந்த அயர்ன் மாஸ்க் அணிந்திருப்பது யார் என்பது தான் படத்தில் ட்விஸ்டே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X