Don't Miss!
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது மிகவும் மோசமான சூழ்நிலை.. வீட்டிலேயே இருங்கள்.. ஜாக்கி சான் அறிவுரை !
சென்னை : கராத்தே குங்ஃபூ மன்னன் ஜாக்கிஜான் கொரோனாவுக்கு எதிரான சில அறிவுரைகளை மக்களுக்கு கூறியுள்ளார்.
உலகளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை கண்டு உலக நாடுகள் எதிர்த்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயுள்ளனர். இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் மிக தாமதமாக துவங்கினாலும் ரயில் பெட்டிகளை மருத்துவமனையாக்கும் அளவிற்கு இந்தியாவில் எதிர்பாராத எண்ணிக்கையில் கொரோனா பரவி வருகிறது. இதில் தமிழ்நாடு முதல் மூன்று இடத்திற்குள் இருப்பது மிகுந்த பயத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது .
சேலையிலும் நானே.. மாடர்ன் உடையில் சோலையும் நானே.. க்யூட் நைலா உஷா!

உலக புகழ் நடிகர் மற்றும் குங்ஃபூ மற்றும் கராத்தே கலைஞருமான நடிகர் ஜாக்கி ஜான் தனது சமூக வலைத்தளபக்கத்தின் மூலம் மக்களுக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். இதில் இது மோசமான நேரமாகும் நாம் அனைவரும் தற்சமயம் எதிர்கொண்டு வரும் ஒரே எதிரி கொரோனா என்று கூறியுள்ளார்.
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகர் ஜாக்கி ஜான். குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தவர் என்ற முறையில் இவர் பேசி இருப்பது பலரை சென்றடையும் என்று நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் மிக பெரிய தாக்கத்தை உலகம் முழுவதும் நிகழ்த்தியிருப்பது வருத்ததிற்குரியது என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றை பரவ விடமால் தடுக்க ஒரே வழி வீட்டில் இருப்பது தான் அதை நீங்கள் கட்டாயம் தவறாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
View this post on InstagramA post shared by Jackie Chan 成龍 (@jackiechan) on
மேலும், வெளியே போகும் சூழ்நிலை ஏற்பட்டால் முக கவசங்களை அணிய மறந்து விடாதீர்கள் மேலும் கைகழுவுவதை கட்டாயமாக்குங்கள் என்று மக்களை அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் வீட்டிலே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியிருக்கிறார் ஜாக்கி ஜான்.

தற்போது ஜாக்கி ஜான் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வெகுவாக உலக ரசிகர்கள் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. உலகமே மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில் உலக பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு தங்களின் அறிவுரைகளையும் ஆறுதல்களையும் மக்களுக்கு கூறி வருகின்றனர் .
கொரோனா தாக்கம் பெரிய அளவில் உள்ள நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு அதிகமாக்கபடலாம் என்று இணையத்தில் மக்கள் அச்சமடைந்து பேசி வருகின்றனர். வரும் நாட்களில் எச்சரிக்கையாக வீட்டிலே இருப்பது அனைவரின் கட்டாயம் என்று அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.