ஜாக்கி சானின் கடைசி ஆக்ஷன் படம் 'சிஇஸட் 12' - ட்ரைலர் வெளியீடு!
இந்த மனிதர் உடல் ரப்பரால் செய்ததா... சண்டைக் காட்சிகளில் இவருக்கு மட்டும் இறக்கை முளைத்துவிடுமா.. என ஆச்சரியத்தின் உச்சிக்கே நம்மைக் கொண்டு செல்பவர் ஜாக்கி சான்.

ஜாக்கி 100
ஹாலிவுட்டையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த ஆசிய சூப்பர் ஸ்டார் இதுவரை 100 படங்களில் நடித்துமுடித்துவிட்டார். பெரும்பாலும் வசூலைக் குவித்த படங்கள் இவை.

சிஇஸட் 12
அடுத்து வருவது அவரது 101வது படம்... சைனீஸ் ஜோடியாக் 12. 'சிஇஸட் 12' என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தின், சீனாவின் ஜோதிட நம்பிக்கையான 12 ராசிகளைக் குறிக்கிறது.

ஹாலிவுட் நடிகர்கள்
வழக்கமாக ஜாக்கியின் படங்களில் சீனர்களின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு மாறுதலாக, முழுக்க ஹாலிவுட் நடிகர்களைப் பயன்படுத்தியுள்ளார் ஜாக்கி.

மனித வாகனம்...
இந்தப் படத்தில் மனித வாகனமாக மாறியிருக்கிறார் ஜாக்கி. உடம்பின் அத்தனை பாகங்களிலும் சக்கரம்... எந்தக் கோணத்தில் திரும்பினாலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சூட்டை அணிந்து நடித்துள்ளார். சீனாவின் அதிவிரைவு சாலைகளில் கனரக வாகனங்கள், தாக்கி அழிக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்ப ஜாக்கி சான் செய்யும் சாகஸங்கள் அதிர வைக்கின்றன.

கடைசி ஆக்ஷன் படம்
இந்தப் படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன் என ஜாக்கி சான் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆக, ஜாக்கியின் கடைசி அதிரடி ஆக்ஷன் படம் என்ற அறிவிப்போடு வெளியாகிறது சிஇஸட் 12.

தமிழகத்தில் 250 அரங்குகளில்..
ஜாக்கியின் 44 படங்களை இந்தியாவில் வெளியிட்ட இந்தோ - ஓவர்சீஸ் பிலிம்ஸ் பெரோஸ் இலியாஸ், 45வது படமாக சிஇஸட் 12-ஐ வெளியிடுகிறார். தமிழகத்தில் மட்டும் 250 தியேட்டர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்தப் படம் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











