''அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ...!''
டெல்லி: டெல்லிக்கு வருகை தந்த ஜாக்கி சான் அங்கு சிறார்களுடன் நடனமாடியும், பாட்டுப் பாடியும், ஜாலியாக பேசியும் கலக்கினார்.
ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஜாக்கி சான்தான். ஹாங்காங், சீனா, ஹாலிவுட் தாண்டி எப்போதாவது மற்ற பகுதிகளுக்கும் அவர் அவ்வப்போது விசிட் அடிப்பது வழக்கம்.
இந்தியாவுக்கும் கூட இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறார். குறிப்பாக தமிழகத்திற்கே கூட அவர் வந்துள்ளார். தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு அவரைக் கூட்டி வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று டெல்லி பக்கம் அவர் தலை காட்டினார்.

சீனப் பட விழா
சீனப் பட விழா ஒன்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை ஜாக்கி சான் தொடங்கி வைத்தார்.

சீன நடிகைகள் புடை சூழ
இந்த விழாவுக்கு ஜாக்கி சான் சீன நடிகைகள் புட சூழ வந்திருந்தார்.

இந்திய சினிமாவுக்குப் பாராட்டு
விழாவில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், இந்திய திரையுலகைப் புகழ்ந்து பேசினார். இந்திய சினிமா சர்வதேச அளவில் பெரிய அளவில் எப்போதோ போயிருக்க வேண்டும். இங்குள்ளவர்கள் அதைச் சரியாகச் செய்யவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தொண்டு நிறுவனத்தில் டான்ஸ்
முன்னதாக தொண்டு நிறுவனம் ஒன்றுக்குச் சென்ற ஜாக்கி, அங்கு சிறார்களுடன் டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி மகிழ்ந்தார்- மற்றவர்களையும் மகிழ்வித்தார்.


Click it and Unblock the Notifications











