வில் ஸ்மித் அடித்த விவகாரம்.. நீங்க இப்படி சொல்லியிருக்க கூடாது.. ஜாடாவை விளாசும் நெட்டிசன்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ் : சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்த சம்பவம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
வில் ஸ்மித் செய்தது சரியா... தவறா என பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு இணையத்தில் விவாதங்கள் எழுந்தன.
இந்த விவகாரம் குறித்து இதுவரை மௌனமாக இருந்த வில் ஸ்மித்தின் ஜாடா பிங்கெட் பேட்டியில் ஒருகருத்தை பகிர்ந்துள்ளார். இதனால் நெட்டிசன்ஸ்கள் ஜாடாவை விளாசி வருகின்றனர்.

ஆஸ்கர் விழா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

அடித்தார்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசுகிறேன் என்று, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா பிங்கெட்டின் தலை முடி குறித்து எக்குத்தப்பாக பேசினார், இதை கேட்டுக்கொண்டிருந்த ஆடியன்ஸ் அனைவரும் ஒட்டுமொத்தமாக சிரித்துவிட்டனர். மனைவி குறித்து கிண்டலடித்ததால் கடுப்பான ஸ்மித், திடீரென்று மேடைக்கு வந்து கிறிஸ் ராக்கை ஓங்கி அறைந்தார்.

ஆத்திரத்தில் கத்தினார்.
அதோடு மட்டுமில்லாமல், மேடையிலிருந்து அமைதியாக வந்த வில் ஸ்மித், என் மனைவியின் பெயர் இனி உன் வாயில் வரக்கூடாது என்று ஆத்திரத்தில் கத்தினார். இதனால், அந்த இடமே என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைவரும் அமைதியாகிவிட்டனர். இதையடுத்து, நடிகர் வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டுவிட்டதாகவும், இந்த செயலால் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் அனைவர் இடத்திலும் மன்னிப்பு கேட்டார்.

அமைதியாக இருந்து இருக்கலாம்
இந்நிலையில், வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா, இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதில், வில் ஸ்மித் அப்போது கொஞ்சம் அதிகமாகவே நடந்துகொண்டார் என்றும் அவர் ஏதும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்றும் ஜடா கூறியுள்ளார். ஜாடாவின் இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், வில் ஸ்மித் அவரது அனைவி ஜாடா 'மானிபுலேட்' செய்கிறார் என்று கூறிவருகின்றனர்.

வழக்கத்திற்கு மாறான திருமணம்
வில் ஸ்மித் மற்றும் ஜாடாவின் வழக்கத்திற்கு மாறான திருமணம் விவகாரம் பலமுறை செய்திகளில் வந்துள்ளது என்றும், வில் ஸ்மித்தின் நடவடிக்கைகள் அவரது எதிர்கால திட்டங்களை இழக்க காரணமாகின்றன. Netflix தனது Fast & Loose படத்தை நிறுத்தி வைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


Click it and Unblock the Notifications











