Just In
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 2 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடக் கொடுமையே.. மகனுடைய நண்பனையே மடக்கிய வில் ஸ்மித் மனைவி.. அவரிடமே நேரடியாவே சொல்றாங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை விட வேற லெவலில் இருக்கு இந்த Red Table Talk ஷோ.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் இருவரும் கலந்து கொண்ட பேஸ்புக் லைவ் ஷோவான ரெட் டேபிள் டாக் ஷோ, ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பி இருக்கிறது.
அந்த ஷோவில், தனக்கு இன்னொருவருடன் இருக்கும் தொடர்பை நடிகர் வில் ஸ்மித்திடம் நடிகையும் அவரது மனைவியுமான ஜடா கூறுவது தான் ஹைலைட்டே.
வைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும் பூனம் பாண்டே!

ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்
பேட் பாய்ஸ், மென் இன் பிளாக், இண்டிபென்டன்ஸ் டே என பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து, உலகளவில் தனக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார் நடிகர் வில் ஸ்மித். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் படமும் உலகளவில் 42 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது மனைவி
ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் வில் ஸ்மித், கடந்த 1992ம் ஆண்டு பெண் தொழிலதிபர் ஷெர்ரி சாம்பினோவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த உறவு வெகு காலம் நீடிக்கவில்லை. 1995ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த வில் ஸ்மித், அமெரிக்க நடிகையும் பாடகியுமான ஜடா பிங்கெட் ஸ்மித்தை 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஹீரோவான மகன்
தன்னை போலவே தனது மகனையும் ஹாலிவுட் ஹீரோவாக மாற்ற பெரு முயற்சி மேற்கொண்டார் நடிகர் வில் ஸ்மித். தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜேடன் ஸ்மித், ஜாக்கி சானின் கராத்தே கிட் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். மீண்டும், தந்தையுடன் இணைந்து ஆஃப்டர் எர்த் படத்தில் நடித்த அவர், மேலும், சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரெட் டேபிள் டாக்
இரண்டாவது மனைவியான ஜடா பிங்கெட் ஸ்மித்தை தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் வில் ஸ்மித், ஜடா அழைத்ததன் பேரில், அவரது பேஸ்புக் ஷோவான ரெட் டேபிள் டாக்கில் வந்து, இருவரும் நேருக்கு நேர் கலந்துரை ஆடினர். அந்த நிகழ்ச்சியில், தனக்கு இன்னொருவருடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து கணவர் வில் ஸ்மித்திடம் பேசியுள்ள வீடியோ தற்போது ஹாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மகன் மூலமாக வந்த தொடர்பு
48 வயதாகும் நடிகை ஜடா, தனது மகன் ஜேடன் ஸ்மித்தின் நண்பரான அமெரிக்க பாடகர் அகஸ்ட் அல்ஸினாவுடன் தற்போது தொடர்பு கொண்டிருக்கிறார். 27 வயதே ஆகும், அகஸ்டாவை தனது மகன் ஜேடன் தான் அறிமுகப்படுத்தினார் என்றும், உடல் நிலை சரியில்லாமல் வீட்டுக்கு வந்த அவரை கவனித்துக் கொண்டு வந்த நிலையில், அவருடன் உறவு வைத்துக் கொண்டதை ஓப்பன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சம்மதம் கேட்கவில்லை
கணவர் வில் ஸ்மித் தன்னை பிரிந்து வாழ்ந்து வருவதால், இளம் பாடகருடன் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக, அவரிடம் எந்தவொரு சம்மதமும் அனுமதியும் தான் பெற வேண்டிய அவசியம் வரவில்லை என்றும், அந்த நிகழ்ச்சியில் கணவர் வில் ஸ்மித்திடம் ஜடா கூறினார். வில் ஸ்மித்தும் நிகழ்ச்சியின் முடிவில் ஜடாவின் சுதந்திரமான முடிவை பாராட்டி அவரை உற்சாகப்படுத்தியது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
இந்த நிகழ்ச்சியை பார்த்த ஹாலிவுட் ரசிகர்கள், இதெல்லாம் ஒரு பொழப்பா என்கிற ரேஞ்சுக்கு கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், நடிகை மார்கட் ராபியுடன் வில் ஸ்மித்துக்கு இருக்கும் தொடர்பு காரணமாகத்தான் ஜடாவை அவர் விட்டுச் சென்றார் என்றும், ஜடாவின் அந்தரங்க வாழ்க்கை அவரை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் கலாய்த்து வருகின்றனர்.