twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கு பிரிட்டன் கடற்படையில் கிடைத்த கவுரவம்.. கொண்டாடும் ரசிகர்கள்!

    |

    லண்டன்: ஜேம்ஸ் பாணட் பட நடிகரான டேனியல் கிரேக்கிற்கு பிரிட்டன் கடற்படையில் மிகப் பெரிய கவுரம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸின் 25வது படமாக நோ டைம் டூ டை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார்.

     அம்பிகா ராதா,நக்மா ஜோதிகா மாதிரி இனியா தாரா ...யார் அக்கா யார் தங்கை? அம்பிகா ராதா,நக்மா ஜோதிகா மாதிரி இனியா தாரா ...யார் அக்கா யார் தங்கை?

    ஜேம்ஸ் பாண்ட் கற்பனை கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நோ டைம் டூ டை படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் க்ரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால்

    லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால்

    மேலும் இந்தப் படத்தில் ராமி மாலேக், லீ செய்டக்ஸ், லாஷனா லின்ச், பென் விஷா, நோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 28ஆம் தேதி லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்படவுள்ளது.

    வரும் 30 ஆம் தேதி ரிலீஸ்

    வரும் 30 ஆம் தேதி ரிலீஸ்

    இதனை தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி பிரிட்டனிலும், அக்டோபர் 8ஆம் தேதி அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இந்தியாவிலும் செப்டம்பர் 30 ஆம் தேதி நோ டைம் டூ டை படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டன் கடற்படையில் கவுரவப் பதவி

    பிரிட்டன் கடற்படையில் கவுரவப் பதவி

    படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். படப்பிடிப்பின் கடைசி நாளில் நடிகர் டேனியல் க்ரேக் படக்குழுவினர் முன்னிலையில் கதறி அழுத வீடியோ வைரலானது. இந்நிலையில் 53 வயதான நடிகர் டேனியல் க்ரேக்கிற்கு பிரிட்டன் கடற்படையில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

    கடற்படையில் கவுரவ தளபதி

    கடற்படையில் கவுரவ தளபதி

    அதாவது ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் ராயல் கடற்படையில் ஒரு கவுரவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் திரையில் நடிக்கும் கற்பனையான கதாப்பாத்திரத்துடன் இந்த பதவி பொருந்துகிறது. பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.

    பிரிட்டனின் உயர்மட்ட கடற்படை அதிகாரி

    பிரிட்டனின் உயர்மட்ட கடற்படை அதிகாரி

    'நோ டைம் டு டை' படத்தின் மூலம் தனது ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை முடித்து கொள்கிறார் நடிகர் டேனியல் க்ரேக். இந்தப் படம் பல மாத தாமதங்களுக்கு பிறகு லண்டனில் அதன் உலக பிரீமியருக்கு வரும் செவ்வாய்க்கிழமை திரையிடப்படுகிறது. பிரிட்டனின் மிக உயர்மட்ட கடற்படை அதிகாரி, முதல் கடற்படை அட்மிரல் டோனி ரடாகின், 2006 முதல் 007 பட நடிகருக்கு கவுரவம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

    ரசிகர்கள் வாழ்த்து

    ரசிகர்கள் வாழ்த்து

    "டேனியல் கிரேக் கடந்த 15 ஆண்டுகளாக தளபதி பாண்டாக அறியப்படுகிறார், உலகம் முழுவதும் பயணம் செய்ததன் மூலம் பிரிட்டனைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு கடற்படை அதிகாரி," என்றும் டேனியல் கிரேக்கிற்கு வாழ்த்து கூறியுள்ளார் டோனி ரடாகின். டேனியல் க்ரேக் கடற்படையில் கவுரவ பதவி வழங்கியிருப்பதற்கு அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    James Bond actor Daniel craig gets honorary in British navy. Daniel Craig's No Time To Die movie will be released by the end of this month.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X