'ஜேம்ஸ் பாண்ட்' டேனியல் க்ரேக்கிற்கு வழங்கப்பட்ட வாக் ஆஃப் ஃபேம் நட்சத்திர அந்தஸ்து!
லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் க்ரேக்கிற்கு வாக் ஆஃப் ஃபேம் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் டேனியல் க்ரேய்க். பிரிட்டிஷ் உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிகர் டேனியல் க்ரேக் 5 படங்களில் நடித்துள்ளார்.
இதன்மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார் டேனியல் க்ரேக். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கடைசி 5 படங்களான கேஸினோ ராயலே, குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்டர் ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் டேனியல் க்ரேக் தான் நடித்துள்ளார்.
ஐந்தாவது படமான நோ டைம் டூ டை திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படம் தான் டேனியல் க்ரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் கடைசியாக நடித்த படம் ஆகும்.
இனி வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் வேறு நடிகர்களே நடிக்கவுள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள டேனியல் க்ரேக்கிற்கு ஹாலிவுட்டின் வாக் ஆஃப் பேம் நட்சத்திர அந்தஸ்து கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
5அக்டோபர் 3ஆம் தேதி வரை 2704 நட்சத்திரங்களுக்கு வாக் ஆஃப் ஃபேம் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் கவுரவம் பெறுவதை ஹாலிவுட் நட்சத்திரங்கள் பெரும் கவுரவமாக கருதி வருகின்றனர்.
இந்நிலையில் வாக் ஆஃப் ஃபேம் கவுரவத்தை பெற்றுள்ள டேனியல் க்ரேக் அதுகுறித்து கூறியிருப்பதாவது, "நான் இதைச் சொல்வேன் என்று நினைத்ததில்லை, ஆனால் ஹாலிவுட் முழுவதும் நடப்பது ஒரு முழுமையான மரியாதை என்பது உங்களுக்குத் தெரியும் என கூறியுள்ளார். மேலும் "நாங்கள் வைத்திருக்கும் நிறுவனத்தால் மகிழ்ச்சியை அளவிடுகிறேன் என்றால், இந்த லெஜன்டுகளால் சூழப்பட்ட இந்த பாதையில் நான் இருப்பது என்னை மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக்குகிறது.. என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











