twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது புரளியாம்பா...அதுக்குள்ள இப்படி சொல்லிட்டாங்க... புதிய ஜேம்ஸ்பாண்ட் பற்றி தயாரிப்பாளர் விளக்கம்

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: புதிய ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி அதன் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார், முதலில். இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

    பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார் கிரேக்.

    பிங்க் நிறத்தில்..அழகான பூஜா ஹெக்டே.. கலக்கல் பிக்ஸ்பிங்க் நிறத்தில்..அழகான பூஜா ஹெக்டே.. கலக்கல் பிக்ஸ்

    டேனி பாய்ல்

    டேனி பாய்ல்

    இதை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டேனி பாய்ல் (danny boyle)இயக்குவதாக இருந்தது. பாண்ட் கேரக்டர் இறப்பது போன்ற கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார் பாய்ல். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஹீரோவை அப்படி சாகடிக்கக் கூடாது என்றார் ஒரு ரசிகனாக.

    கேரி ஜோஜி புகுனகா

    கேரி ஜோஜி புகுனகா

    திரைக்கதை ஆசிரியர் மறுத்ததால் கருத்து வேறுபாடு காரணமாக, படத்தில் இருந்து வெளியேறினார் பாய்ல். பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை (Cary Joji Fukunaga) இயக்குனராக்கியது தயாரிப்புத் தரப்பு. இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய ஹாலிவுட் படங்களை இயக்கியவர். இந்த பாண்ட் படம், ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    லஷனா லின்ச்

    லஷனா லின்ச்

    டேனியல் கிரேக் நடிக்கவில்லை என்பதால் அடுத்து பாண்ட் கேரக்டரில் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருக்கிறார் என்றும் 'கேப்டன் அமெரிக்கா' படத்தில் நடித்த லஷனா லின்ச் தான் அவர் என்றும் (Lashana Lynch)கூறப்பட்டது. இதுபற்றி தகவல்கள் பரபரப்பானது.

    ஆண் நடிக்கும் கேரக்டர்

    ஆண் நடிக்கும் கேரக்டர்

    'அடுத்த பாண்ட், கறுப்பினத்தவராகவோ அப்படி இல்லாதவராகவோ இருக்க முடியும். ஆனால், அவர் ஆணாகத்தான் இருப்பார். பெண்ணாக இருக்க மாட்டார். பாண்ட் கேரக்டர், ஆண் நடிக்க வேண்டிய கேரக்டர்.

    சுவாரஸ்யமானவர்கள்

    சுவாரஸ்யமானவர்கள்

    இதில் பெண்ணை நடிக்க வைப்பதில் உடன்பாடில்லை. பெண்கள் இதைவிட சுவாரஸ்ய மானவர்கள். அவர்களுக்கு படத்தில் வலுவான கேரக்டர்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பெண் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

    English summary
    A lot of talks are going around about who will be the next Bond after Daniel Craig. Reports of 'Captain Marvel' star Lashana Lynch succeeding Craig have been doing rounds the internet. but producer says, 007 can never be a woman
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X