For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜேம்ஸ் பாண்ட்சீரிஸ் 25வது படம்.. நோ டைம் டு டை..தந்தை மகளின் பாசக்கதை !

  |

  காலிஃபோர்னியா : ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றால் பொதுவாக சண்டைக் காட்சிகள் மிகுந்ததாகவும் அதிரடியாக வில்லன்களை துரத்தி பிடிக்கும் ஆக்ஷன் காட்சிகளை கொண்ட கதைக்களமாக தான் பெரும்பாலும் இருக்கும்.

  இது போன்ற ஆக்சன் பட கதைகளைக் கொண்டு இதுவரை பல படங்கள் ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற சாயலில் வந்துள்ளது. அவ்வாறு வரும் படங்கள் மக்களிடம் தொடர்ந்து வரவேற்பையும் பெற்று வருகிறது.

  இப்போது தயாராகிவரும் "நோ டைம் டு டை" என்ற ஜேம்ஸ்பாண்ட் படம் முந்தைய படங்களை விட இது வித்தியாசமாவும் ஜேம்ஸ்பாண்டிற்கு வேறு வடிவத்தையும் கொடுக்கும் என அந்த படக்குழு தெரிவித்து வருகிறது.

  ஜான் இஸ் கம்மிங்.. வேட்டையாட துவங்கும் விக்ரம்.. விரைவில் துருவ நட்சத்திரம் டப்பிங் ஸ்டார்ட்!ஜான் இஸ் கம்மிங்.. வேட்டையாட துவங்கும் விக்ரம்.. விரைவில் துருவ நட்சத்திரம் டப்பிங் ஸ்டார்ட்!

  25வது படமாக

  25வது படமாக

  ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படமான "நோ டைம் டு டை" அதிரடி காட்சிகளுடன் தயாராகி வந்தது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவில் நடக்கும் அசாதாரண சூழ்நிலையால் அதன் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப்பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வில்லன்களை துரத்தி பிடிக்கும் காட்சிகளை மட்டுமே நிரப்பி வைத்திருக்கும் வேலையில் , தற்போது இந்தப் படம் சற்று வித்தியாசமாக இருக்கும் எனவும் - இதில் ஜேம்ஸ்பாண்ட், உலகத்தை நோய்த் தொற்றுப் பரவலில் இருந்து காப்பாற்றும் வேலையை செய்யவிருக்கிறார் என்கிறார்கள் சில நெருங்கிய வட்டாரங்கள்.

  தந்தை பாசம்

  தந்தை பாசம்

  ஜேம்ஸ் பாண்டின் கடைசி சீரிஸான "ஸ்பெட்டர்" படத்தில் ஜேம்ஸ்பாண்டுக்கும் டாக்டர் மேட்லின் ஸ்வானுக்கும் இடையே காதல் மலர்வதாக காட்டப் பட்டிருந்தது. அந்தக் காதலின் வாயிலாக பிறந்த குழந்தைதான் இந்த 5 வயது மகள் மாதில்டே. தனது ஐந்து வயது மகளுடன் தந்தையாக இந்த படத்தில் ஜேம்ஸ்பாண்ட் நடித்து வருகிறார். ஜேம்ஸ் பாண்ட் தான் ஒரு தந்தை என்பது இந்த கதையில் தெரியவர கதையின் ஆரம்பத்திலேயே ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக்கில் வில்லன் ஒரு சிறிய பெண்ணை துரத்துவது போல இருக்கும். இதுவரைக்கும் ஜேம்ஸ் பாண்டை அதிரடி சண்டைக்காட்சிகளும் அதீத முத்தக் காட்சிகளிலும் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்கள் இப்போது ஜேம்ஸ் பாண்டை தந்தை மகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை காட்டும் ஒரு சென்டிமென்ட் படமாக இருக்கும் என்கின்றனர் இந்த படக்குழு. இருப்பினும் ரெகுலர் சேசிங் மற்றும் சுவாரஸ்ய சண்டைகள் காணப்படும் என்றும் சொல்லுகிறார்கள்.

  உலகத்தை காக்க

  உலகத்தை காக்க

  "நோ டைம் டு டை" தந்தை மகள் பாசம் மற்றும் வைரஸ் தொற்று பற்றிய படம் என்பதால் அனைவரும் இது கொரானாவை மையப்படுத்திய ஒரு படமாக இருக்கும் என சிந்தித்து வரும் வேளையில், அப்படக்குழு அதே போன்று ஒரு வைரஸ் தான் ஆனால் கொரானவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இல்லை என தெரிவித்து வருகிறது. இந்த படத்தின் கதை மற்றும் படப்பிடிப்பு கொரானா என்ற ஒன்று பரவுவதற்கு முன்பே எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

  வைரஸ் பற்றிய கதை

  வைரஸ் பற்றிய கதை

  இதுபோன்ற ஒரு அசாதாரண வைரஸ் தொற்று உலகெங்கிலும் இப்போது பரவி இருக்கும் சூழலில் அனைவரின் விருப்பமான ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் இதை மையப்படுத்தி வெளிவருவதால் ரசிகர்கள் தங்களை எளிதாக படத்துடன் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான கேரி ஜோஜி இயக்கிவருகிறார். ஹேண்ட்சம் ஜேம்ஸ்பாண்டாக டேனியல் மீண்டும் நடிக்க அவரது 5 வயது குழந்தையாக மகளாக மாடில்டே இதில் வருகிறார்.

  ரசிகர்கள் ஆர்வம்

  ரசிகர்கள் ஆர்வம்

  இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஏப்ரலில் வெளியாகும் என சொல்லி வந்த நிலையில் கொரானாவின் தாக்கத்தால் இதன் வெளியீட்டு தேதி தற்போது வரும் நவம்பரில் வெளியாக திட்டமிட்டிருப்பதாக அந்த படக் குழுவின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சண்டைக் காட்சிகளால் ஆனா ஜேம்ஸ் பாண்டை பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது வேறுவிதமான சென்டிமென்ட் ஜேம்ஸ் பாண்டை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  English summary
  James Bond Series 25th film No Time to Die
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X