பிரபல ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் மரணம்.. வில்லனாக நடித்தாலும் எனக்கு நீங்க தான் ஹீரோ.. மனைவி உருக்கம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏலியன் மற்றும் லிவ் அண்ட் லெட் லிவ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் யாபெட் கோட்டோ காலமானார். அவருக்கு வயது 81.

உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த யாபெட் கோட்டாவின் மூன்றாவது மனைவி எழுதியுள்ள உருக்கமான பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.

சில சினிமா படங்களில் வில்லனாக நீங்கள் நடித்திருந்தாலும், எனக்கு எப்போதுமே நீங்க ஹீரோ தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் வில்லன்

ஜேம்ஸ் பாண்ட் வில்லன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்த யாபெட் கோட்டோ, 1963ம் ஆண்டு 4 for Texas எனும் படம் மூலம் அறிமுகமானார். 1973ம் ஆண்டு ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த லிவ் அண்ட் லெட் லிவ் படத்தில் மிஸ்டர் பிக் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் உலக ரசிகர்களை மிரட்டினார்.

ஏலியன் படத்தில்

ஏலியன் படத்தில்

இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான ஏலியன் திரைப்படத்தில் தொழில்நுட்ப நிபுணர் டென்னிஸ் பார்க்கர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மேலும் அர்னால்ட் உடன் இணைந்து தி ரன்னிங் மேன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

3 முறை திருமணம்

3 முறை திருமணம்

1959ம் ஆண்டு ரிட்டா டிட்மேன் என்பவரை திருமணம் செய்த இவர், 1976ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 1975ம் ஆண்டு டோனி பெட்டி ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்ட கோட்டோ 1989ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பின்னர் கடைசியாக 1998ம் ஆண்டு டெஸ்ஸி சினாஹன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 24 ஆண்டுகள் அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். கோட்டாவுக்கு மொத்தம் 6 குழந்தைகள்.

காலமானார்

காலமானார்

1939ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்த பிரெட்டரிக் கோட்டோ சினிமாவில் யாபெட் கோட்டாவாக பிரபலமானார். திங்களன்று இரவு 10.30 மணிக்கு (பிலிப்பைன் நேரம்) இவர் காலமானதாக இவரது மூன்றாவது மனைவியான டெஸ்ஸி சினாஹன் பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

வில்லன் இல்லை ஹீரோ

வில்லன் இல்லை ஹீரோ

81 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமான கோட்டோவின் பிரிவால் வாடி வரும் அவரது மனைவி டெஸ்ஸி சினாஹன், நீங்கள் சில திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், எனக்கு எப்பவுமே ஹீரோ தான். நல்ல கணவராக இத்தனை ஆண்டுகள் என்னை பார்த்துக் கொண்டீர்கள், உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன் என உருகியுள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

பழம்பெரும் அமெரிக்க நடிகரான யாபெட் கோட்டாவின் மறைவு ஹாலிவுட் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் யாபெட் கோட்டாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X