Avatar 3: நீ இன்னும் போகலையா?.. அவதார் படத்தின் 3ம் பாகம் ரெடி.. டைட்டில் என்ன தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் பிரம்மாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் உலக சினிமா ரசிகர்களுக்கு ஏலியன்களையும், ஹியூமனாய்டு ரோபோக்களையும், டைட்டானிக் மூழ்கும் காட்சியையும் காட்டிய நிலையில், கடந்த 2009ம் ஆண்டு அவதார் படத்தை வெளியிட்டு அகில உலக ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.

அவதார் முதல் பாகம் வெளியாகி டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. 25000 கோடி ரூபாய் வரை அவதார் வசூல் செய்ததாக கூறப்பட்டது. அந்த படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க பெரும் போராட்டத்திற்கு பிறகு மார்வெல் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்து முறியடித்தது.

Avatar 3 James Cameron 3

அவதார் படத்தின் 2ம் பாகமான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. ஆனால், பல ஆண்டுகள் கழித்து வெளியான அந்த படம் வசூல் வேட்டை நடத்தினாலும் விமர்சனங்களையும் பெருமளவில் சந்தித்தன. இந்நிலையில், அதன் அடுத்த பாகம் குறித்த அப்டேட்டை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இன்று நடைபெற்ற டிஸ்னி 23ம் ஆண்டு விழாவில் வெளியிட்டுள்ளார்.

அவதார் 3ம் பாகத்தின் டைட்டில்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சாம் வொர்த்திங்டன், ஜோ சால்டனா நடிப்பில் வெளியான அவதார் படத்தின் 2 பாகங்களும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஈட்டி கல்லா கட்டின. முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகம் இல்லை என இந்தியன் 2வை ரசிகர்கள் திட்டித் தீர்த்தது போல அவதார் 2வையும் கலாய்க்க ஆரம்பித்தனர். ஆனால், இந்தியன் 2 அளவுக்கு கலாய்க்கவில்லை என்பது தனிக்கதை. இந்நிலையில், அவதார் 3ம் பாகத்தையும் எடுத்து வரும் ஜேம்ஸ் கேமரூன் அதன் டைட்டிலை இன்று அறிவித்துள்ளார். அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் (Avatar: Fire and Ash) என முழுக்க முழுக்க இந்த முறை தண்ணீரில் இருந்து மாறி நெருப்புக்கு தாவி விட்டார் ஜேம்ஸ் கேமரூன்.

Avatar 3 James Cameron 3

ஏகப்பட்ட பாண்டோரா: பூமியில் இருந்து விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ குழுவினர் பாண்டோரா எனும் வேற்று கிரகத்துக்கு சென்று அங்கே உள்ள சக்திகளை அடைய அங்குள்ள ஆதிவாசி மக்களை அடித்து விரட்டுவது தான் அவதார் படத்தின் கதையாக உள்ளது. 2ம் பாகத்தில் ஜேக் சுலிவனை பழி வாங்க வேண்டும் என அந்த ராணுவ அதிகாரி அவதாராக மாறி போராடுகிறார். இந்நிலையில், அடுத்த பாகத்தில் பாண்டோராவின் ஏகப்பட்ட எல்லைகளை ரசிகர்கள் பார்க்கப் போவதாகவும் நிச்சயம் இந்த முறை நினைத்து பார்க்க முடியாத விஷுவல் ட்ரீட் கிடைக்கும் என்றும் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

Avatar 3 James Cameron 3

எப்போ ரிலீஸ்: அவதார் படத்தின் 3வது பாகம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார். இந்த படத்திலும் கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பல கோடி ரூபாய் செலவில் அவதார் படத்தை 5 பாகத்துக்கு மேல் எடுப்பேன் என்கிற ஒரு முடிவுடனே ஜேம்ஸ் கேமரூன் உள்ளார். இன்னமும் அவரிடம் இருந்து வேறு விதமான படத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்தாலும் அவருடைய விருப்பம் அவதார் உலகத்தை விரிவுபடுத்துவது மட்டும் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X