லாக்டவுனால் அந்த பிரச்னை இல்லை..'அவதார் 2' பற்றி இப்படி சொன்ன பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: அவதார் படத்தின் அடுத்த பாகம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்று இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் சயின்ஸ் பிக்சன் படம், 'அவதார்.'

இந்தப் படம் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வசூலில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது.

அடுத்தப் பாகம்

அடுத்தப் பாகம்

இந்தியாவிலும் இந்தப் படத்துக்கு வரவேற்புக் கிடைத்தது. சாம் வொர்த்திங்டன், ஸோ சல்தானா, ஸ்டீபன் லாங், மைக்கேல் ரொன்ட்ரிக்யூஸ் உட்பட பல நடித்திருந்தனர். இந்தப் படத்தின் அடுத்தப் பாகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுபற்றி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தனர். ஆனால், அடுத்த பாகத்தை உடனடியாகத் தொடங்காத கேமரூன், கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கினார்.

நான்கு பாகம்

நான்கு பாகம்

அதை, ஒரு பாகமாக இல்லாமல், நான்கு பாகங்கள் எடுக்க முடிவு செய்து, ஒவ்வொரு பாகத்தையும் இரண்டு வருட இடைவெளியில் வெளியிடவும் முடிவு செய்திருந்தார். அதாவது, இரண்டாம் பாகத்தை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியும், மூன்றாம் பாகத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியும், நான்காம் பாகத்தை டிசம்பர் 19, 2025 ஆம் ஆண்டும் அடுத்த பாகத்தை, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியும் வெளியிடுவது என்று திட்டம் வகுத்திருந்தார்.

தள்ளிப் போகும்

தள்ளிப் போகும்

இந்த ஷூட்டிங்கை தொடர்ச்சியாக முடித்துவிடவும் அவர் நினைத்திருந்தார் ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடும் சிக்கலை சந்தித்து வருகிறது. லாக்டவுனால் உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அவதார் படத்தின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டதால், இதன் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது.

கேமரூன் விளக்கம்

கேமரூன் விளக்கம்

இந்நிலையில் இதன் ரிலீஸ் பற்றி ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் அளித்துள்ளார். 'லாக்டவுன் காரணமாக, அவதார் 2 படத்தில் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முடிந்ததும் தொடங்குவோம். நியூசிலாந்தில் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த அல்ல, ஒரேடியாக அழிக்க அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருகிறது.

Recommended Video

Dhanush Emotional message | உள்ளம் கனிந்த நன்றி | Dhanush k Raja
மாற்றம் இருக்காது

மாற்றம் இருக்காது

அதனால், எங்கள் ஷூட்டிங் தொடங்க இன்னும் 2 மாதம் ஆகலாம். ஆனால், பட ரிலீஸ் தேதியில் மாற்றமும் இருக்காது' என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த, சாம் வொர்த்திங்டன், ஸோ சல்தானா, ஸ்டீபன் லாங் உட்பட சிலர் நடிக்கின்றனர். இவர்களுடன் புதிதாக, கேத் வின்ஸ்லெட் உட்பட மேலும் சிலர் இணைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X