மாணவிகளுடன் உறவு... அப்பொழுது தப்பாக தோன்றவில்லை... ஒப்புகொண்ட ஸ்பைடர்மேன் நடிகர்

நியூயார்க் : நடிப்புப் பள்ளியை சேர்ந்த மாணவிகளுடன் உறவு கொண்டதாகவும் அப்பொழுது அது தவறாக தோன்றவில்லை என்றும் ஸ்பைடர்மேன் புகழ் ஜேம்ஸ் பிரான்கோ ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் தான் செக்சிற்கு அடிமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் பிரான்கோ மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகள் செக்ஸ் புகார் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து பிரான்கோ வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஸ்பைடர்மேன் நடிகர்

ஸ்பைடர்மேன் நடிகர்

ஸ்பைடர்மேன் 2 மற்றும் 3வது பாகத்தில் நடித்துள்ளவர் ஜேம்ஸ் பிரான்கோ. இவர் நடிகராக மட்டுமின்றி திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், கவிஞர் என பல முகங்களை கொண்டவராக உள்ளார். ஸ்பைடர்மேன் படத்தில் நடித்து சிறப்பான பெயரை கொண்டுள்ளார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்மீது பாலியல் புகார் எழுந்தது. பிரான்கோ நடத்திய நடிப்புப் பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவிகள் இவர்மீது புகார் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இருந்து வெளிவர 2.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுக்க இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

புகார் குறித்து ஒப்புதல்

புகார் குறித்து ஒப்புதல்

முதலில் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த பிரான்கோ, தற்போது இந்த விவகாரத்தில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தான் நடிப்பு பள்ளி மாணவிகளுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் கடந்த 20 ஆண்டுகளாக செக்சிற்கு அடிமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவிகளுடன் உறவு

மாணவிகளுடன் உறவு

இந்தப் பள்ளியில் பாடம் நடத்தியபோது தான் மாணவிகளுடன் உறவு கொண்டதாகவும் ஆனால் அது அப்போது தப்பாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெண்களை ஈர்ப்பதற்காக இந்தப் பள்ளியை நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

செக்ஸ் ஒரு போதை

செக்ஸ் ஒரு போதை

அப்போது தெளிவில்லாமல் தான் அவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செக்சும் ஒரு போதை என்று கூறியுள்ள பிரான்கோ, அதிலிருந்து வெளிவர கடந்த 2016 முதல் தான் முயன்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிர்வலையை ஏற்படுத்திய பிரான்கோ

அதிர்வலையை ஏற்படுத்திய பிரான்கோ

முன்னதாக மதுவிற்கு அடிமையாக இருந்த தான் அதிலிருந்து மீண்டுவர செக்சிற்கு அடிமையானதாகவும் பிரான்கோ தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர், அனைவரையும் தன்னுடைய படங்களின்மூலம் ஈர்த்த பிரான்கோ இவ்வாறு கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X