ஹாலிவுட்டை மிரட்டும் கொரோனா வைரஸ்...டாம் ஹாங்க்ஸை தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயினும் பாதிப்பு!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின் ஓல்கா குரிலென்கோ, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

படப்பிடிப்புகள் ரத்து

படப்பிடிப்புகள் ரத்து

இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும் 31 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்புகள், ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருப்பது பற்றி அரசு அறுவுறுத்தி வருகிறது.

டாம் ஹான்க்ஸ்

டாம் ஹான்க்ஸ்

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் டாம் ஹாங்க்ஸ் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நிலையில், டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதித்தது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் டாம் ஹாங்க்ஸ், கொரோனா வைரஸ் தங்களைத் தாக்கியது குறித்து அறிந்து, பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி. இதுவரை தனிமைப்படுத்தப் பட்டே இருக்கிறோம். எங்களால் யாருக்கும் இந்தத் தொற்றுப் பரவாமல் பார்த்துக் கொள்கிறோம். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறோம் என்று சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஓல்கா குரிலென்கா

ஓல்கா குரிலென்கா

இந்நிலையில், ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ (Olga Kurylenko)வையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரே தெரிவித்துள்ளார்.

உடல் சோர்வு

உடல் சோர்வு

'எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வாக இருப்பதுதான் இதன் முதல் அறிகுறிகள். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதை சிரியசாக எடுத்துக் கொள்ளுங்கள்' என்று ஓல்கா குரிலென்கோ தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X