ஜாக்சனின் டாக்குமென்டரி படம்- பார்க்க மாட்டாராம் ஜேனட்

மரணமடைவதற்கு முன்பு திஸ் இஸ் இட் என்ற பெயரில் இசை நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்து வந்தார் ஜாக்சன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்து போனதால், அந்த ஒத்திகை நிகழ்ச்சிகளைத் தொகுத்து திஸ் இஸ் இட் என்ற பெயரில் டாக்குமென்டரி படமாக்கி விட்டனர். இந்தப் படம் தற்போது பெரும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை தான் இறுதி வரை பார்க்கப் போவதே இல்லை என்று ஜேனட் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஜாக்சன் குடும்பத்தினர் - தந்தை ஜோ, சகோதரர்கள் உள்பட அனைவருமே இந்தப் படத்தைப் பார்க்க திரண்டு சென்றனர். ஆனால் ஜேனட் மட்டும் வரவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அதைப் பார்க்கவில்லை. பார்க்கவும் மாட்டேன். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பார்க்க மாட்டேன். அதைப் பார்த்தால் நிச்சயம் எனக்கு வலி கூடும். அதை என்னால் தாங்க முடியாது என்றார் நெகிழ்ச்சியுடன்.
Comments
ஜேனட் ஜாக்ச்ன் டாக்குமென்டரி படம் திஸ் இஸ் இட் மைக்கேல் ஜாக்சன் documentary film janet jackson michael jackson this is it


Click it and Unblock the Notifications