கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பிரபல நடிகை திடீர் பலி.. தொடரும் மரணத்தால் திரையுலகம் ஷாக்!

By

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Arnold Massive Contribution | Shah Rukh Khan Donated? | Lock Down

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, சீனாவில் உருவான கொரோனா வைரஸ். இது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

ஓல்கா குரிலென்கோ

ஓல்கா குரிலென்கோ

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்குத் திரும்பினர். ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோவும் இதன் பாதிப்புக்கு ஆளானார். பின்னர் குணமாகி விட்டதாகத் தெரிவித்திருந்தார்.

மார்க் ப்ளம்

மார்க் ப்ளம்

ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் உயிரிழந்தார். இவர், ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ், க்ரொக்கடைல் டண்டி, பிளசண்ட் டே, லவ்சிக், தி பிரசிடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர், பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்தார். கடந்த மாதம் 23 ஆம் தேதி, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, டோக்கியோவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

ஆண்ட்ரூ ஜாக்

ஆண்ட்ரூ ஜாக்

அடுத்து, ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனாவுக்கு பலியானார்.
அவருக்குப் பின், எட்டி லார்ஜ் என்ற பிரிட்டீஷ் காமெடி நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்க நடிகையும் எழுத்தாளருமான பேட்ரிசியா போஸ்வொர்த் (patricia bosworth), நியூயார்க்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார்.

மார்லன் பிராண்டோ

மார்லன் பிராண்டோ

த நன்ஸ் ஸ்டோரி உட்பட சில புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள போஸ்வொர்த், ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவின் சுயசரிதையை எழுதியவர், இவர்தான். மேலும் சில புகழ்பெற்ற சினிமா பிரபலங்களின் சுயசரிதையையும் எழுதியுள்ளார்.

ஸ்பீல்பெர்க் பட நடிகை

ஸ்பீல்பெர்க் பட நடிகை

இந்நிலையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பட நடிகை லீ ஃபியர்ரோ கொரோனாவுக்கு மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 91. இவர் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ், ஜாஸ்: த ரிவெஞ்ச், த மிஸ்ட் ஓவர் டேல்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்துவந்த இவர், கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் கொரோனாவுக்கு உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X