53 வயதான அனகோண்டா பட நடிகைக்கு 8 பெட்ரூம் வீடாம்.. விலையை கேட்டீங்கனா அவ்ளோ தான்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 53 வயதை கடந்த அனகோண்டா படத்தின் ஹீரோயின் ஜெனிஃபர் லோபஸ் மற்றும் 50 வயதான பேட்மேன் பட நடிகர் பென் அஃப்லெக் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், பிரம்மாண்ட அரண்மனை ஒன்றை பல நூறு கோடி கொடுத்து தற்போது வாங்கி உள்ளனர்.
பிரபல அமெரிக்க நடிகை மற்றும் பாடகியான ஜெனிஃபர் லோபஸ் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், 4வது முறையாக பேட்மேன் பட நடிகர் பென் அஃப்லெக்கை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் புதிதாக இவர்கள் வாங்கியுள்ள பிரம்மாண்ட வீட்டில் 8 பெட்ரூம்கள் மற்றும் 11 பாத்ரூம்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனகோண்டா ஹீரோயின்
1986ம் ஆண்டு மை லிட்டில் கேர்ள் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிஃபர் லோபஸ். 1997ம் ஆண்டு வெளியான அனகோண்டா திரைப்படம் இவரை உலகளவில் பிரபலமாக்கியது. யூ டர்ன், தி செல், ஜெர்ஸி கேர்ள், ஹஸ்ட்லர்ஸ், மேரி மீ, ஷாட் கன் வெட்டிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், பிரபல அமெரிக்க பாடகி என்பது கூடுதல் சிறப்பு.

பேட்மேன் ஹீரோ
53 வயதான ஜெனிஃபர் லோபஸை 50 வயதான பேட்மேன் பட நடிகர் பென் அஃப்லெக் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே 2005ம் ஆண்டு நடிகை ஜெனிஃபர் கார்னர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பென் அஃப்லெக் கடந்த 2018ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. பேட்மேன் vs சூப்பர்மேன், ஜஸ்டீஸ் லீக், விரைவில் ரிலீஸாக உள்ள தி ஃபிளாஷ் உள்ளிட்ட படங்களில் பேட்மேனாக நடித்து உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

4வது கணவர்
அனகொண்டா ஹீரோயின் ஜெனிஃபர் லோபஸ் 1997ம் ஆண்டு ஒஜானி நோவா என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர், கிறிஸ் ஜூட் மற்றும் மார்க் ஆண்டனி என்கிற ஹாலிவுட் பிரபலங்களை திருமணம் செய்தார். இவருக்கு 2 குழந்தைகளும் வயதுக்கு வந்த நிலையில், உள்ளனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு பேட்மேன் பட நடிகர் பென் அஃப்லெக்கை காதலித்து 4வது முறையாக திருமணம் செய்து கொண்டது ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

பிரம்மாண்ட அரண்மனை
லாஸ் ஏஞ்சல்ஸில் புதிதாக ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் வாங்கி உள்ள வீட்டை வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு 8 பெட்ரூம், 11 பாத்ரூம், 800 சதுர அடியில் ஒரு ஜிம் ரூம், தனியாக ஸ்பா செய்யும் நீச்சல் குளம், என ஒட்டுமொத்தமாக 16 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி தங்களுக்கு பிடித்த மாதிரி இன்டீரியர் வேலைகளை செய்து வருகின்றனர்.

523 கோடியாம்
60 மில்லியன் டாலர் மதிப்பில் வாங்கி உள்ள இந்த சொகுசு பங்களாவின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 523 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் என இந்த வயதில் இத்தனை கோடிக்கு 8 பெட்ரூம் வீடு வாங்கி பேட்மேன் நடிகர் மஜா பண்ணுகிறாரே என இன்னமும் திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் சாபம் விடாத குறையாக இந்த செய்தியை வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











