குழந்தை பிறந்த சந்தோஷம்.. தாய்ப்பால் கொடுக்கும் செல்ஃபியை பதிவிட்ட ஹாலிவுட் நடிகை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை ஜென்னா டேவன், தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை செல்ஃபி எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் சானிங் டாட்டமின் முன்னாள் மனைவியும் நடிகையுமான ஜென்னா டேவனுக்கு கடந்த மார்ச் 6ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சானிங் டாட்டம் உடன் விவாகரத்து செய்து கொண்ட நடிகை ஜென்னா டேவன், தனது புதிய காதலரான ஸ்டீவ் காஸியுடன் இணைந்து இந்த குழந்தையை பெற்றுள்ளார்.
பிரெக்னன்ஸி போட்டோஷூட்
ஸ்டெப் அப், சவுண்ட் டிராக், விட்சஸ் ஆஃப் ஈஸ்ட் எண்ட், தி ரெசிடன்ட் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வரும் ஜென்னா டேவன், சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த படி நடத்திய பிரெக்னன்ஸி போட்டோஷூட் புகைப்படங்கள், உலகளவில் வைரலானது.

விவாகரத்து
ஹாலிவுட் நடிகர் சானிங் டாட்டமுக்கும் நடிகை ஜென்னா டேவனுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆனது. 2018ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இந்த தம்பதியினருக்கு எவர்லி டாட்டம் என்ற அழகிய பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.
திருமணம் ஆகாமலே
விவாகரத்து முடிந்த கையோடு, நடிகை ஜென்னா டேவன், ஸ்டீவ் காஸி என்பவரை காதலித்து வருகிறார். இதுவரை இவர்கள் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், இருவருக்கும் தற்போது அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு, கேலம் மைக்கேல் ரிபெல் காஸி என்ற பெயரை ஜென்னா வைத்துள்ளார்.

தாய்ப்பாலூட்டும் புகைப்படம்
குழந்தை பிறந்து ஒருவார காலம் ஆகியுள்ள நிலையில், ஹாலிவுட் நடிகை ஜென்னா டேவான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். மேலும், அதில், ரொம்ப சந்தோஷம் என்ற கேப்சனையும் கொடுத்துள்ளார். ஜென்னாவின் இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
Recommended Video

எப்போ கல்யாணம்
கடந்த 2018ம் ஆண்டே ஜென்னா டேவன் காதல் விவகாரம் இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் இருவரும் தங்கள் காதலை இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தற்போது, குழந்தை பிறந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என ஹாலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











