பிரெக்னென்ஸி போட்டோஷூட்டுக்காக முற்றும் துறந்த ஹாலிவுட் நடிகை! உலகளவில் வைரலாகும் புகைப்படம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஜென்னா டேவான் தனது பிரெக்னென்ஸி போட்டோ ஷூட்டுக்காக தனது ஆடைகளை துறந்துள்ளார்.
வெறும் லேஸ் டிரெஸ் அணிந்து தனது கர்ப்பமான வயிற்றை காட்டியுள்ள ஜென்னா டேவான் பிரபல ஹாலிவுட் நடிகர் சானிங் டாட்டமின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜென்னா டேவானின் இந்த பிரெக்னென்ஸி போட்டோஷூட் புகைப்படங்கள் உலகளவில் வைரலாகி வருகிறது.
ஆடைகள் இன்றி
உலகளவில் பெண்கள் கர்ப்பம் தரித்த பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது போட்டோஷூட் நடத்துவதை சமீபத்தில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். ஹாலிவுட் நடிகையான ஜென்னா டேவான், பிரெக்னென்ஸி போட்டோஷூட்டுக்காக தனது ஆடைகளை துறந்து வெறும் லேஸ் டிரெஸ் மட்டும் அணிந்து தனது முழு அழகும் தெரியும் படி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அழகா இருக்கீங்க
ஜென்னா டேவான் வெளியிட்டுள்ள நிறைமாத கர்ப்பிணி போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன் ரொம்ப அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளார். பொதுவாகவே பெண்கள் கர்ப்ப காலத்தில் தான் பேரழகாக இருப்பார்கள் என்பது பிரபலமான கூற்றும் கூட. அந்த விஷயத்தில் ஜென்னா அதிர்ஷ்டசாலி தான்.
குவிகிறது வாழ்த்துக்கள்
ஹாலிவுட் நடிகையும் பிரபல டான்ஸருமான ஜென்னா டேவான் வெளியிட்டுள்ள நிறைமாத கர்ப்பிணி போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், விரைவில் அழகான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் என்றும், இப்போ தான் ரொம்ப அழகா இருக்கீங்க என்றும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாத் டப்
நிறைமாத கர்ப்பிணியான ஜென்னா டேவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது வயிற்றை வெளிக்காட்டியபடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஜென்னா, பாத் டப்பில் கர்ப்பமான வயிற்றை காட்டியபடி எடுத்துள்ள புகைப்படம் பல லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது.
பேக்கப் டான்ஸர்
ஹாலிவுட் பிரபலம் ஜானட் ஜாக்சனுக்கு பேக்கப் டான்ஸராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜென்னா டேவான், பிரபல ஹாலிவுட் நடிகரான சானிங் டாட்டமை கடந்த 2009ம் ஆண்டு மணந்தார். பத்து வருட கால வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2018ம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆனது.
புது உறவு
சானிங் டட்டமை விவாகரத்து செய்த ஜென்னா டேவான், கடந்த ஆண்டு அமெரிக்க பாடகர் மற்றும் நடிகரான ஸ்டீவ் காஸியை திருமணம் செய்து கொண்டார். ஸ்டீவ் காஸிக்கும் ஜென்னா டேவானுக்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கான பிரெக்னன்ஸி போட்டோஷூட்டை தான் தற்போது ஜென்னா நடத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











