கொட்டும் மழையில் 'சிக்ஸ் பேக்' காட்டி ஆடிப் பாடி அதிர வைத்த ஜெனீபர் லோபஸ்!

By Sudha

Jennifer Lopez
வயசானாலும் உன்னோட ஸ்டைல் மட்டும் இன்னும் மாறவே இல்லை என்று படையப்பாவில் ரஜினியைப் பார்த்து ரம்யா கிருஷ்ணன் 'சைட்' அடித்துக் கூறுவார். அது நிச்சயம் ஜெனீபர் லோபஸுக்கும் பொருந்தும். அவருடைய பாடல்களுக்கு அடிமையானவர்களை விட அவரது அசரடிக்கும் அந்த அமைதியான அழகுக்கு அடிமையாக இருப்பவர்கள்தான் அதிகம்.

இன்று 42 வயதில் இருக்கும் ஜெனீபருக்கு உலகம் முழுவதும் இன்னும் ரசிகர்களிடம் மவுசு குறையவில்லை. இந்தநிலையில் 48 இசைக் கச்சேரிகளுடன் புதிய உலகப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஜெனீபர் லோபஸ் பிரேசில் நாட்டில் அதிரடியான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் அசத்தி விட்டார்.

கொட்டும் மழையில் அவரது இசை நிகழ்ச்சி நடந்தது. மழையைப் பொருட்படுத்தாமல், ஜெனீபரோடு கூடவே பாடி நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்தனர் பிரேசில் ரசிகர்கள்.

பிரேசிலின் ரெசிப் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது ஜெனீபர் தனது அசர வைக்கும் குரலை மட்டுமல்லாமல், தனது 6 பேக் உடல் வனப்பையும் காட்டி அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். இவருக்கா 42 வயது என்று அத்தனை பேரும் வாயடைத்துப் போகும் வகையில் மின்னல் போல மேடையில் ஏறிப் பாடி ஆடினார் ஜெனீபர்.

அவரது குரல் வசீகரமும், உடல் கட்டுக்கோப்பும் அனைவரையும் ஜெனீபர் பைத்தியங்களாக்கி விட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்கள், மழையைப் பொருட்படுத்தாமல் அனுபவித்து ரசித்தது ஜெனீபரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது.

இந்த நிகழ்ச்சியுடன் தனது உலக சுற்றுப்பயணத்தின், தென் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டார் ஜெனீபர். அதன் பின்னர் தனது சொந்த ஊரான நியூயார்க்குக்கு சிறிய ஓய்வுக்காக கிளம்பிச் சென்றார்.

தனது பிரேசில் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு ஜெனீபரை திக்குமுக்காட வைத்துள்ளது. அத்தனை ரசிகர்களுக்கும் தனது நன்றிகளைக் கூறிக் கொள்வதாக டிவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ஜெனீபர்.

அடுத்து தொடரப் போகும் தனது இசை நிகழ்ச்சியில், 25 வயதான தனது காதலரும், டான்ஸருமான கேஸ்பர் ஸ்மார்ட்டுடன் இணைந்து கலக்கப் போகிறார் ஜெனீபர் லோபஸ்.

பழசு பழசுதாம்ப்பா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X