Don't Miss!
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா?: நடிகை விளக்கம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனார் என்று வெளியான தகவலை நடிகை ஜெனிபர் லாரன்ஸ் மறுத்துள்ளார்.
ஜெனிபர் லாரன்ஸ் தன்னுடன் உறவு கொண்டதால் தான் நடிகையாகி ஆஸ்கர் விருது எல்லாம் வாங்கினார் என ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பெருமை பேசியதாக நடிகை ஜேன் டோ தெரிவித்துள்ளார். வெயின்ஸ்டீன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்த மனுவில் ஜேன் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதை ஜெனிபர் லாரன்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பெண்கள்
ஹார்வி வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை நினைத்து என் இதயமே நொறுங்கிவிட்டது. அவருடன் நான் உறவு கொண்டது இல்லை. வேலை நிமித்தமாக பேசியதை தவிர எங்களுக்கு இடையே வேறு எதுவும் கிடையாது. பெண்களை தன் வலையில் விழ வைக்க ஹார்வி வெயின்ஸ்டீன் இப்படி எதையாவது கூறுகிறார் என்று ஜெனிபர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் லாரன்ஸ்
என்னுடன் படுக்கைக்கு வந்ததால் தான் அந்த பெண் பெரிய நடிகை ஆனார் என்று கூறி பெண்களை தன் வழிக்கு வரவழைத்துள்ளார் ஹார்வி வெயின்ஸ்டீன் என்பதற்கு ஜேன் டோ கூறியது ஒரு எடுத்துக்காட்டு என்கிறார் ஜெனிபர் லாரன்ஸ். பட வாய்ப்பு தேடி வந்த பல நடிகைகளிடம் பலவந்தமாக ஓரல் செக்ஸ் வைத்துள்ளார் ஹார்வி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நடிகைகளை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார் அவர்.
விளக்கம்
ஹார்வி வெயின்ஸ்டீன் ஜெனிபர் லாரன்ஸுடன் உறவு கொண்டது இல்லை. அப்படி இருக்கும்போது நடிகை ஜேன் டோ தவறுதலாக கூறியுள்ளதை அறிந்து வெயின்ஸ்டீன் வெட்கப்பட்டுள்ளார். இது அவரின் பெயரை கெடுக்கும் முயற்சி என்று ஹார்வி வெயின்ஸ்டீனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது
வெயின்ஸ்டீன் தயாரித்த சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஜெனிபர் லாரன்ஸுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. வெயின்ஸ்டீன் தன்னிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொண்டது இல்லை என்று ஜெனிபர் லாரன்ஸ் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.