இந்த நடிகைக்கு பொத்து பொத்துன்னு விழுவதே வேலையாப் போச்சு
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் நியூயார்க்கில் நடந்த எக்ஸ் மென் பட பிரீமியர் நிகழ்ச்சியில் நிலைதடுமாறி விழுந்தார்.
வெறும் 23 வயதே ஆகும் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் பலர் ஏங்கும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார். சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் என்ற படத்திற்காக அவருக்கு 2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
அவர் விழாக்களில் தடுக்கி விழுவது வழக்கமாகிவிட்டது.

2013 ஆஸ்கர்
2013ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வாங்கச் சென்ற ஜெனிபர் மேடையில் பொத்தென்று விழுந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

2014 ஆஸ்கர்
2014ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட ஜெனிபர் லாரன்ஸ் கால் தடுக்கி கீழே விழுந்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கர் விழாவில் கீழே விழுந்துள்ளார்.

எக்ஸ் மென்
ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ள எக்ஸ்-மென்- டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட் படத்தின் பிரீமியர் ஷோ நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜெனிபர் கலந்து கொண்டார்.

மீண்டும்
எக்ஸ்-மென் பிரீமியர் ஷோவுக்கு தரையைத் தொடும் கவுன் அணிந்து வந்த ஜெனிபர் கால் தடுக்கி விழப் போனார். இம்முறை அவர் தரையில் விழும் முன்பு அவரை இருவர் பிடித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











