கணவருடன் பிரிவு.. மதுவுக்கு அடிமையான பிரபல நடிகை.. ரொம்ப ஓவரா குடிக்கிறாங்களாம்
நியூயார்க்: உலகளவில் ஃபேமஸானவர் ஜெனிஃபர் லோபஸ். பாடகியும், நடிகையுமான அவருக்கென்று உலகின் பல நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரும் நடிகர் பென் அப்லெக்கும் டேட்டிங் செய்த பிறகு 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் விவாகரத்து கோரி ஜெனிஃபர் லோபஸ் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குடிக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஒளிபரப்பான ஸ்கெட்ச் காமெடி என்ற டெலிவிஷன் சீரிஸில் டான்ஸராக தனது கரியரை ஆரம்பித்தவர் ஜெனிஃபர் லோபஸ். அந்த சீரிஸில் ஜெனிஃபரின் அழகும் திறமையும் ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் இவர் கண்டிப்பாக மிகப்பெரிய ஃபேமஸான செலிபிரிட்டியாக வருவார் என்று அப்போது பலரும் ஆரூடங்கள் கூற ஆரம்பித்தனர். அவர்கள் சொன்னபடியே ஜெனிஃபர் பெரிய செலிபிரிட்டியாக வர ஆரம்பித்தார்.

சினிமாவில்: செலினா, அனகோண்டா உள்ளிட்ட படங்களில் அசால்ட்டாக நடித்து அமெரிக்கா மட்டுமின்றி அந்த நாட்டுக்கு வெளியேயும் தனக்கான ரசிகர்களை சேர்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் பலரையும் கட்டிப்போட்டார். கடந்த வருடம்கூட அவர் நடித்திருந்த தி மதர் படம் மெகா ஹிட்டானது. இதற்கிடையே இசையிலும் ஆர்வம் உடைய அவர் ஏகப்பட்ட ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு திருமணங்கள்: புகழின் உச்சியில் இருந்தாலும் திருமண விவகாரத்தில் அவர் சில சர்ச்சைகளை சந்தித்தவர். இதுவரை நான்கு திருமணங்கள் செய்திருக்கிறார் அவர். முதலில் நோஹா என்பவரை திருமணம் செய்து பிரிந்த அவர் அடுத்ததாக கிறிஸ் ஜூட், மார்க் ஆண்டனி ஆகியோரை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுடனும் சேர்ந்து வாழாமல் விவாகரத்து பெற்றார். அதனையடுத்து பேட்மேனாக நடித்த பென் அப்லெக்கை திருமணம் செய்துகொண்டார்.
நன்றாக போன வாழ்க்கை: இந்தத் திருமண உறவாவது கண்டிப்பாக நீடிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றபடிதான் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக வாழ்ந்துவந்தனர். சமீபத்தில்கூட இஷா அம்பானியின் பங்களாவை பல நூறு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி அங்கு குடியேறினார்கள் அந்தத் தம்பதி. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து எழ ஆரம்பித்ததாக ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.
குடிக்கு அடிமை: சூழல் இப்படி இருக்க பென் அப்லெக்கிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கோரி ஜெனிஃபர் லோபஸ் சமீபத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது பெரும் அதிர்ச்சியை ஹாலிவுட்டில் ஏற்படுத்தியது. இந்நிலையில் பென் அப்லெக்கை பிரிவதற்கும் மனமில்லாமல், அவருடன் சேர்ந்து வாழ்வதற்கும் மனமில்லாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஜெனிஃபர் லோபஸ் குடிக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. மனுத்தாக்கல் செய்த பிறகு மனம் மாறிய ஜெனிஃபர் பென்னிடம் நாம் சேர்ந்து வாழலாம் என்று சொன்னதாகவும்; ஆனால் பென்னோ அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டதால் உச்சக்கட்ட விரக்தியடைந்த ஜெனிஃபர் லோபஸ் தினமும் அளவுக்கதிகமாக மது அருந்திவருவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











