மிரட்டும் கொரோனா.. பிரபல ஹீரோயின் திருமணம் பாதிப்பு.. 'எப்ப நடக்கும்னு தெரியலையே' நடிகை வருத்தம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனாவால் பிரபல நடிகையின் திருமணம் பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ். கவர்ச்சி நடிகையான இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
அனகொண்டா, மாஸ்டர் இன் லா, தி செல், தி பாய் நெக்ஸ்ட் டோர், கடந்த ஆண்டு வெளியான ஹஸ்ட்லர்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

ரொமான்டிக் காமெடி
இப்போது மேரி மீ என்ற ரொமான்டிக் காமெடி படத்தில் நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. 50 வயதான லோபஸ், தனது செக்ஸி லுக்கால், உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளப் பக்கங்களில் பல மில்லியன் ரசிகர்கள், அவரை பின் தொடர்கின்றனர்.

திருமண நிச்சயதார்த்தம்
அதில் அடிக்கடி ஹாட் போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார் ஜெனிபர் லோபஸ். இவரும், 44 வயதான அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் என்ற முன்னாள் பேஸ்பால் வீரரும் காதலித்து வருகின்றனர். கடந்த வருடம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். திருமணம் இந்த மாதம் நடப்பதாக இருந்தது.

கொரோனாவால் பாதிப்பு
இந்நிலையில், கொரோனாவால் இவர்கள் திருமணம் தள்ளிப் போகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு இந்த வைரஸூக்கு சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள், பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இருந்தும் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. புளோரிடா ஆளுநர் அங்கு லாக்டவுனை அறிவித்துள்ளார்.

எப்போது திருமணம்?
இதுபற்றி ஜெனிபர் லோபஸ் கூறும்போது, 'இப்படியொரு சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்றும் தெரியவில்லை. எப்போது எங்கள் திருமணம் நடக்கும் என்பது பற்றியும் தெரியவில்லை. அதனால் சில மாதங்கள் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இதனால், அவர்கள் திருமணம் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











