பேட்மேன் நடிகருக்கும் 52 வயது நடிகைக்கும் நிச்சயமானது.. 4வது திருமணத்துக்கு தயாரான ஜெனிஃபர் லோபஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அழகிய தமிழ் மகன் படத்தில் நமீதாவுடன் விஜய் நடனமாடும் "நீ மர்லின் மன்றோ க்ளோனிங்கா இல்லை ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா" என வரிகள் வரும், அந்த அளவுக்கு உலகளவில் தனது கச்சிதமான அழகுக்காகவே பிரபலமானவர் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ்.

அணகொண்டா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் பிரபல பாடகியும் ஆவார்.

52 வயதாகும் நடிகை ஜெனிஃபர் லோபஸ் இரண்டாவது முறையாக மீண்டும் பேட்மென் நடிகர் பென் அஃப்லெக்கை நிச்சயம் செய்துள்ளார்.

கவர்ச்சியின் உச்சம்

கவர்ச்சியின் உச்சம்

202 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டிருக்கும் நடிகை ஜெனிஃபர் லோபஸை கவர்ச்சியின் உச்சம் என்றே சர்வதேச ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 52 வயதான நிலையிலும், பிகினி உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உலகத்தையே சூடாக்கி வருகிறது. இந்நிலையில், இவரது நிச்சயதார்த்த செய்தி தீ போல பரவி வருகிறது.

பேட்மேன் நடிகர்

பேட்மேன் நடிகர்

பேட்மேன் vs சூப்பர்மேன், ஜஸ்டிஸ் லீக் உள்ளிட்ட டிசி படங்களில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக். கடந்த 2005ம் ஆண்டு ஜெனிஃபர் கார்னர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், 2018ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார். 3 குழந்தைகளுக்கு அப்பாவான இவருக்கு தற்போது 49 வயதாகிறது.

2வது முறை நிச்சயம்

2வது முறை நிச்சயம்

கடந்த 2002ம் ஆண்டு நடிகை ஜெனிஃபர் லோபஸுக்கு நடிகர் பென் அஃப்லெக் புரபோஸ் பண்ண நிலையில், இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். ஆனால், திடீரென அந்த நிச்சயத்தை நடிகை ஜெனிஃபர் லோபஸ் கேன்சல் செய்து விட்டு மார்க் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 20 ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் மீண்டும் ஏப்ரல் 8ம் தேதி நிச்சயம் செய்து கொண்டனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

4வது திருமணம்

4வது திருமணம்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஒஜானி நோவா என்பவரை 1997ம் ஆண்டு திருமணம் செய்த ஜெனிஃபர் லோபஸ் ஒரே ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். பின்னர், 2001ம் ஆண்டு நடன இயக்குநர் கிறிஸ் ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபர் லோபஸ் 2003ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு, 2004ம் ஆண்டு மார்க் ஆண்டனி எனும் அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபர் லோபஸ் 2014ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது தனது 4வது திருமணத்துக்கு தயாராகி வருகிறார் ஜெனிஃபர் லோபஸ்.

பச்சை வைர மோதிரம்

பச்சை வைர மோதிரம்

நடிகை ஜெனிஃபர் லோபஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பென் அஃப்லெக்கின் இத்தனை ஆண்டு கால காதலை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட நிலையில், நிச்சயம் செய்யும் போது போடப்பட்ட பல கோடி மதிப்புள்ள பச்சை வைர மோதிரத்தையும் காட்டியுள்ளார். இந்த இரு காதல் ஜோடிகளையும் ரசிகர்கள் வாழ்த்தியும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X