54 வயது நடிகைக்கு 500 கோடி வீட்டை விற்ற இஷா அம்பானி.. பேட்மேன் நடிகருடன் 12 பெட்ரூம் வீட்டில் மஜா!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் பேட்மேனாக நடித்து பிரபலமான பென் அஃப்லெக் மற்றும் அனகோண்டா பட நாயகி ஜெனிஃபர் லோபஸ் இருவரும் கடந்த ஆண்டு 500 கோடிக்கு பிரம்மாண்டமான வீட்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சொந்தமாக லாஸ் ஏஞ்சல்ஸ்லில் இருந்த வீட்டைத்தான் வாங்கியுள்ளனர்.

54 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் மூன்று கணவர்களை விவாகரத்து செய்து விட்டு 4வதாக பேட்மேன் பட நடிகர் பென் அஃப்லெக்கை திருமணம் செய்துக் கொண்டார்.

Jennifer Lopez and Ben Affleck buys 500 crore bungalow from Isha Ambani

திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து வாழ்வதற்காக பிரம்மாண்ட அரண்மனை ஒன்றை வாங்கியுள்ளனர். அதன் விலையை கேட்டு அகில உலகமே ஆடிப்போயுள்ளது.

4 திருமணங்கள்: ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸுக்கு 54 வயதாகிறது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தி மதர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1997ம் ஆண்டு ஒஜானி நோஹா என்பவரை திருமணம் செய்த ஜெனிஃபர் லோபஸ் அவருடன் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாமல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் கிறிஸ் ஜூட் என்பவரை 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபர் லோபஸ் 2003ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அடுத்து மார்க் ஆண்டனி என்பவரை 2004ம் ஆண்டு திருமணம் செய்து 2014ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பிரிந்தார்.

பேட்மேன் நடிகரின் மனைவி: கடைசியாக 4வது கணவராக பேட்மேன் படங்களில் நடித்து வந்த பென் அஃப்லெக் என்பவரை காதலித்து 50 வயதுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்டார் ஜெனிஃபர் லோபஸ். இந்நிலையில், பிரம்மாண்ட அரண்மனை வீட்டை தனது மனைவிக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறார் பேட்மேன் நடிகர் எனக் கூறுகின்றனர்.

12 பெட்ரூம்: சுமார் 38 ஆயிரம் சதுர அடி இடம் கொண்ட பிரம்மாண்ட சொகுசு அரண்மனையை 500 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 12 பெட்ரூம், ஒரு பெரிய நீச்சல் குளம், டென்னிஸ் பால் கோர்ட், ஜிம், ஸ்பா, சலூன், அவுட்டோர் கிட்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்ட அழகான வீடு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பீவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது.

இஷா அம்பானி வீடு: இந்த வீட்டை அம்பானியின் மகள் இஷா அம்பானியிடம் இருந்து ஜெனிஃபர் லோபஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாங்கி ரெஜிஸ்டர் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க மதிப்பு படி 61 மில்லியன் டாலர் விலையில் வாங்கிய இந்த வீட்டின் இந்திய மதிப்பு சுமார் 500 கோடி என்கின்றனர். பென் அஃப்லெக் இதற்கு முன் இருந்த தனது பங்களா வீடான பசிபிக் பலிசேட்ஸ் வீட்டை 28.5 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளார். அதே போல ஜெனிஃபர் லோபஸ் பெல் ஏர் எனும் இடத்தில் உள்ள 30 மில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துக்களை விற்று இந்த வீட்டை இருவரும் இணைந்து காதல் சின்னமாக வாங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X