2 வருஷம் கூட சேர்ந்து வாழல.. அதற்குள் விவாகரத்து.. 4வது கணவரையும் பிரிந்த பிரபல நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் பேட்மேனாக நடித்து பிரபலமான பென் அஃப்லெக் மற்றும் அனகோண்டா, மதர், அட்லஸ் படங்களின் மூலம் அகில உலக ரசிகர்களையும் கவர்ந்த ஜெனிஃபர் லோபஸ் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில், 2 ஆண்டுகள் கூட சேர்ந்து வாழாத நிலையில், இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டனர்.

கடந்த ஆண்டு 500 கோடி ரூபாய்க்கு 12 பெட்ரூம்கள் கொண்ட இஷா அம்பானியின் பிரம்மாண்டமான வீட்டை வாங்கி இருவரும் ராஜ வாழ்க்கை வாழ குடிபுகுந்தனர். 54 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் ஏற்கனவே மூன்று கணவர்களை விவாகரத்து செய்து விட்டு 4வதாக பேட்மேன் பட நடிகர் பென் அஃப்லெக்கை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தற்போது அவரையும் பிரிகிறார்.

Divorce Jennifer Lopez Ben Affleck

ஜெனிஃபர் லோபஸ் விவாகரத்துக் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி ஹாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

4 முறை திருமணம்: அனகொண்டா படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான ஜெனிஃபர் லோபஸுக்கு 54 வயதாகிறது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தி மதர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ஏஐ டெக்னாலஜியை வில்லனாக்கி அட்லஸ் படத்திலும் நடித்திருந்தார். 1997ம் ஆண்டு ஒஜானி நோஹா என்பவரை திருமணம் செய்த ஜெனிஃபர் லோபஸ் அவருடன் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாமல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் கிறிஸ் ஜூட் என்பவரை 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபர் லோபஸ் 2003ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அடுத்து மார்க் ஆண்டனி என்பவரை 2004ம் ஆண்டு திருமணம் செய்து 2014ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பிரிந்தார். அடுத்ததாக 2022ம் ஆண்டு பென் அஃப்லெக்கை திருமணம் செய்தார்.

Divorce Jennifer Lopez Ben Affleck

வெளியேறிய பென் அஃப்லெக்: கடைசியாக 4வது கணவராக பேட்மேன் படங்களில் நடித்து வந்த பென் அஃப்லெக் என்பவரை காதலித்து 50 வயதுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்டார் ஜெனிஃபர் லோபஸ். கடந்த 2022ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இருவரும் இஷா அம்பானிக்கு சொந்தமான பிரம்மாண்ட அரண்மனையை 500 கோடி கொடுத்து வாங்கினர். சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட சண்டை காரணமாக பென் அஃப்லெக் அந்த அரண்மனையை விட்டுப் பிரிந்த போதே இருவரது விவாகரத்து தகவல் தீயாக பரவியது.

Divorce Jennifer Lopez Ben Affleck

ஜெனிஃபர் லோபஸ் விவாகரத்து: ஹாலிவுட் நடிகையும் பிரபல பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் தனது கணவர் பென் அஃப்லெக்கை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவிலேயே பென் அஃப்லெக்கை அவர் பிரிய உள்ளார் என்றும் ஜீவனாம்சமாக பல கோடி ரூபாய் அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X