ஓவர் அலம்பல்.. ஜிம்முக்கு போக விஐபி டிக்கெட்டாம்.. கொரோனா கலவரத்திலும் இந்த நடிகை அடங்கலையே!
மியாமி: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள நிலையில், இந்த பிரபல நடிகை மட்டும் ஜிம்முக்கு சென்று வருகிறார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் கொரோனா பீதியால் ஜிம் உள்ளிட்ட பல இடங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் தனது காதலருடன் விஐபி டிக்கெட் மூலம் ஜிம்முக்கு சென்று வரும் தகவல் வைரலாக பரவி வருகிறது.

கவர்ச்சி நடிகை
அனகொண்டா, தி செல், தி பாய் நெக்ஸ்ட் டோர், கடந்த ஆண்டு வெளியான ஹஸ்ட்லர்ஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் ஜெனிஃபர் லோபஸ். 50 வயதிலும், தனது செக்ஸியான தேகத்தால், பல மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வைத்துள்ளார் ஜெனிஃபர்.
இன்ஸ்டா அழகி
உலகளவில் பிரபலம் வாய்ந்த ஜெனிபர் லோபஸுக்கு இன்ஸ்டா பக்கத்தில் 117 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் மில்லியன் கணக்கில் ஹார்ட்டீன்களும், பல்லாயிரக்கணக்கான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. தனது ஓவர் கவர்ச்சியால் ரசிகர்களை வளைத்துப் போட்டுள்ளார்.

இந்த நேரத்திலும் ஜிம்
50 வயதிலும் இவ்வளவு செக்ஸியான தேகத்தை ஜெனிஃபர் லோபஸ் கொண்டிருக்க காரணம் தீவிரமான உடற் பயிற்சி தான். எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும், ஜிம்முக்கு போவதை ஜெனிஃபர் லோபஸ் நிறுத்துவதே இல்லை. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவே அலறி கிடக்கும் நேரத்திலும் ஜிம்முக்கு சென்று வருகிறார்.

விஐபி பாஸ்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 2 லட்சம் பேர் அவதிப்பட்டு வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலும், வீட்டில் அடங்கி இருக்காமல், தனது காதலருடன் விஐபி பாஸ் பெற்றுக் கொண்டு நடிகை ஜெனிஃபர் லோபஸ் ஜிம்முக்கு சென்று வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இளம் வயது காதலர்
50 வயதாகும் ஜெனிஃபர் லோபஸும் 44 வயதாகும் அவரது காதலர் அலெக்ஸ் ரோட்ரிக்ஸும் இணைந்து ஜிம்முக்கு போகும் போட்டோக்கள் இணையத்தை சர்ச்சையை கிளப்பியுள்ளன. இத்தனைக்கும் அந்த ஜிம் பூட்டியுள்ளது என்ற அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள நிலையிலும், பின்பக்க வழியாக விஐபி அனுமதி பெற்று சென்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











