ஜெனிபர் லோபஸ் பிள்ளைகளும்... அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் பிள்ளைகளும் இனி சேர்ந்து விளையாடுவாங்க

வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் நான்காவது முறையாக ஃபேஸ் பால் விளையாட்டு வீரர் அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார். அதே சமயத்தில் இத்திருமணத்தை ஜெனிஃபர் லோபஸின் மகன் மேக்ஸ் தான் முன்னின்று நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்குமே குழந்தைகள் இருக்கின்றன. இனி இருவரின் குழந்தைகளுமே சேர்ந்து விளையாடுவார்கள்.

ஜெனிஃபர் லோபஸ், இந்த பேரைக் கேட்டாலே இன்றைய இளைஞர்களுக்கு மது அருந்தாமலேயே கிக் ஏறும். அந்த அளவுக்கு அழகிலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை கிறங்கடித்தவர்.

Jennifer Lopez, the fourth married to Alex Rodriguez

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் லோபஸ் சுருக்கமாக ஜே.லோ என்று செல்லப் பெயராலும் அழைக்கப்படுவதுண்டு. இவர் ஒரு பன்முகத் திறமை கொண்டவர் என்றால், நிச்சயம் அது மிகையாகாது. இவர் ஹாலிவுட் நடிகை என்பதோடு, பாடகி, டான்ஸர், ஃபேஷன் டிசைனர் மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்ற அடையாளமும் உடையவர்.

இப்படி தன்னுடைய அழகாலும் திறமையாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஜெனிஃபர் லோபஸ் நான்காவது முறையாக ஃபேஸ்பால் விளையாட்டு வீரர் அலெக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர் ஆனால் இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

இவர்கள் இருவருக்கும் வேறு திருமணங்களின் மூலம் குழந்தைகள் உள்ளனர். மேக்ஸ் மற்றும் எம்மே எனும் இரட்டை குழந்தைகள் ஜெனிஃபர் லோபஸுக்கு உள்ளனர், எல்லா மற்றும் நடாஷா என இரு மகள்கள் அலெக்ஸ் ரோட்ரிக்ஸுக்கு உள்ளனர்.

இந்த திருமணத்தில் தங்கள் இருவரின் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அவர்களையும் இதில் ஈடுபடுத்த உள்ளனர். அவர்கள் இருவரின் குழந்தைகளும் ஆரம்பத்தில் இருந்து பழகி புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டனர்.

திருமணத்திற்கான ஆடைகள், இடம் என தங்களுடைய திட்டங்கள் குறித்து இருவரும் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் நிச்சயம் ஜெனிஃபர் லோபஸின் திருமணத்தை அவருடைய மகன் மேக்ஸ் தான் முன்னின்று நடத்துவார் என்பது மட்டும் உறுதி. அவர்களின் திருமணம் குறித்த தகவல் கூடிய விரைவில் அறிவிக்கப்பட்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: jennifer lopez
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X