54 வயசுல இவ்ளோ கிளாமர் தேவையா?.. மெட் காலாவில் சீத்ரூ உடையில் மிரள வைத்த அனகோண்டா ஹீரோயின்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: மெட் காலா நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் பங்கேற்ற நிலையில், அவரது சீத்ரூ உடையை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். சமீபத்தில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் ஆலியா பட் பங்கேற்றார்.

கிம் கர்தாஷியன், கெண்டல் ஜென்னர், அனா ஹாத்வே, ஜெனி என பல ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற இந்த கண்கவர் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பல விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு நடிகைகள் ரசிகர்களை சொக்க வைத்தனர்.

Jennifer Lopez transparent and elegant dress at Met Gala stuns everyone


இதில், 54 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் அணிந்து வந்த டிரான்ஸ்பரன்ட் உடையை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

4 கணவர்கள்: ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸுக்கு 54 வயதாகிறது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தி மதர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1997ம் ஆண்டு ஒஜானி நோஹா என்பவரை திருமணம் செய்த ஜெனிஃபர் லோபஸ் அவருடன் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாமல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் கிறிஸ் ஜூட் என்பவரை 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபர் லோபஸ் 2003ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அடுத்து மார்க் ஆண்டனி என்பவரை 2004ம் ஆண்டு திருமணம் செய்து 2014ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பிரிந்தார்.

Jennifer Lopez transparent and elegant dress at Met Gala stuns everyone


பேட்மேன் நடிகருடன் வாழ்க்கை: கடைசியாக 4வது கணவராக பேட்மேன் படங்களில் நடித்து வந்த பென் அஃப்லெக் என்பவரை காதலித்து 50 வயதுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்டார் ஜெனிஃபர் லோபஸ். இந்நிலையில், பிரம்மாண்ட அரண்மனை வீட்டை தனது மனைவிக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறார் பேட்மேன் நடிகர் எனக் கூறுகின்றனர்.

Jennifer Lopez transparent and elegant dress at Met Gala stuns everyone


இஷா அம்பானி வீடு: சுமார் 38 ஆயிரம் சதுர அடி இடம் கொண்ட பிரம்மாண்ட சொகுசு அரண்மனையை 500 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 12 பெட்ரூம், ஒரு பெரிய நீச்சல் குளம், டென்னிஸ் பால் கோர்ட், ஜிம், ஸ்பா, சலூன், அவுட்டோர் கிட்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்ட அழகான வீடு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பீவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. இஷா அம்பானிக்கு சொந்தமான வீட்டை சமீபத்தில் இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர்.

Jennifer Lopez transparent and elegant dress at Met Gala stuns everyone


மெட் காலாவில் உச்சகட்டம்: 54 வயதானாலும் இன்னமும் இளமை துள்ளி விளையாடுவது போல சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டு அடுத்த குழந்தைக்கு பிளான் செய்து வரும் ஜெனிஃபர் லோபஸ் மெட் காலாவில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் சீத்ரூ உடையை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X