Just In
- 2 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 2 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 2 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 2 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Sports
அவ்வளவு ஈஸியா விட்ற மாட்டோம்.. கோவாவுக்கு சவால் விடுக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்!
- News
மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Automobiles
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிர்வாண தேவதையாக மாறிய ஜெனிபர் லோபஸ்.. 2021ம் ஆண்டை வரவேற்க புதுத் திட்டம்.. குவியுது லைக்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் நிர்வாண தேவதையாக மாறியுள்ள போட்டோ சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
2021ம் ஆண்டை முன்னிட்டு தனது புதிய ஆல்பத்தை வெளியிட காத்திருக்கின்றார் ஜெனிபர் லோபஸ்.
ஆடை ஏதும் அணியாமல், முழு நிர்வாண கோலத்தில், முதுகு பகுதியில் சிறகுகளுடன் காட்சி தரும் அவரது புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

50 வயதிலும் குறையாத கவர்ச்சி
1969ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நியூயார்க்கில் பிறந்த ஜெனிபர் லோபஸுக்கு தற்போது 50 வயதாகிறது. ஆனாலும், தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில், மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு வெள்ளை நிற பிகினி உடையில் ஜெனிபர் பதிவிட்ட ஹாட் செல்ஃபி ஏகப்பட்ட பிரபலங்களையே மெர்சல் ஆக்கியது.

ஜிம் வெறியை
அணகொண்டா, தி செல் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து கலக்கிய ஜெனிபர் லோபஸ் ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களையும் பாடி ஆடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் ஒரு ஜிம் பிரியை என சொல்வதை விட ஜிம் வெறியை என்றே சொல்லலாம். கொரோனா காலத்தில் அமெரிக்காவே பூட்டிக் கிடந்த நேரத்திலும் விஐபி பாஸ் வாங்கி ஜிம்முக்கு போனவர் ஜெனிபர் லோபஸ்.

பிகினி பேபி
பிகினி உடையணிந்து இந்த வயதிலும் தனது கட்டுக்கோப்பான கவர்ச்சி தேகத்தால் ஏகப்பட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஜெனிபர் லோபஸ். நீ மர்லின் மன்றோ மோனிங்கா இல்ல ஜெனிபர் லோபஸ் ஸ்கேனிங்கா என அழகிய தமிழ் மகன் படத்தில் வரும் அந்த வரிகளுக்கு சொந்தக்காரரும் இவர் தான்.

பாப் பாடகி
ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி, பாப் இசை உலகில் பல பாடல்களை பாடியும் உலகளவில் ரசிகர்களை சேர்த்துள்ளார் ஜெனிபர் லோபஸ். மெடிசின், ஃபீல் தி லைட், பூட்டி, ஐ எம் ரியல் உள்ளிட்ட பல இசை ஆல்பங்கள் பல மில்லியன் ரசிகர்களை ஜெனிபர் பக்கம் திரள காரணமாக அமைந்தது. வரும் புத்தாண்டை முன்னிட்டும் தனது புதிய ஆல்பத்தை வெளியிட காத்திருக்கிறார்.

நிர்வாண தேவதை
இந்நிலையில், தற்போது உடம்பில் ஒட்டுத் துணி கூட அணியாமல் முழு நிர்வாண கோலத்தில், முதுகில் சிறகுகளுடன் வானில் இருந்து பூமியில் குதித்த தேவதை போல காட்சி தரும் தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்வதேச ரசிகர்களை திணறடித்துள்ளார் ஜெனிபர் லோபஸ்.
2021 ஸ்பெஷல்
2021ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் 'In the morning' எனும் ஆல்பம் பாடலை ரிலீஸ் செய்ய உள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதன் வீடியோ பாடல் டீசரையும் வெளியிட்டு வைரலாக்கினார் ஜெனிபர் லோபஸ். இந்நிலையில், நிர்வாண தேவதையாக இருக்கும் போட்டவையும் தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.