நம்ம ஊரில் எத்தனை பேர் "இதுக்கு" முக்கியத்துவம் கொடுப்பாங்க.. சொல்லுங்க!

By Sudha

லாஸ் ஏஞ்சலெஸ்: படத்தில் நடிக்கும்போது தேவையில்லாமல் "வாயு பகவான்" வெளி வந்து சுற்றி இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்க விடக் கூடாதே என்பதற்காக தனது சாப்பாட்டில் சில ஐட்டங்களைத் தவிர்த்து சாப்பிட்டு ஷூட்டிங்கில் வலம் வந்தாராம் ஹாலிவுட் நடிகை ஜெஸ்ஸிகா ஆல்பா.

சின் சிட்டி 2 - ஏ டேம் டு கில் ஹர் என்பதுதான் ஆல்பா தற்போது நடித்து வரும் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அவர் ஒரு சீனில் டைட்டான உடையில் நடிக்க வேண்டியிருந்தது.

இந்த உடையில் நடிக்கும்போது வாயு பிரிவு பிரச்சினை பெரிதாகி ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் முகச் சுளிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக சில உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு பின்னர் நடிக்க வந்தாராம் ஆல்பா.

காய்கறி டயட்

காய்கறி டயட்

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தற்போது டயட்டில் இருந்து வருகிறேன். காய்கறிகள்தான் அதிகம் சாப்பிடுகிறேன்.

வாயு பிரச்சினை

வாயு பிரச்சினை

ஷூட்டிங்கின்போது நான் மிகவும் டைட்டான உடையில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த உடையில் நடிக்கும்போது வாயு பிரச்சினை ஏற்பட்டு மற்றவர்களுக்கு அசவுகரியம் வந்து விடக் கூடாது என்பதற்காக சில உணவுகளை நான் தவிர்த்தேன்.

முட்டை கோஸ்.. காலிபிளவர்...!

முட்டை கோஸ்.. காலிபிளவர்...!

முட்டை கோஸ், காலிபிளவர் போன்றவை வாயுவை அதிகமாக்கும். எனவே அவற்றே அறவே நிறுத்தி விட்டேன். அதேபோல கேஸ் பிரச்சினையை ஏற்படுத்தும் உணவு வகைகளையும் தவிர்த்து விட்டேன். வயிறு ப்ரீயாக இருப்பதை உறுதி செய்த பின்னரே ஷூட்டிங்குக்கு வந்தேன்.

நல்லவேளை... வரவே இல்லை!!

நல்லவேளை... வரவே இல்லை!!

நல்லவேளையாக படப்பிடிப்பு முடியும் வரை எந்த 'அசம்பாவிதமும்' நடக்கவில்லை.. என்றார் சிரித்தபடி...!

கேட்கவே "சிலிர்க்குதுங்க" ஆல்பா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X