“சீச்சீ.. நாய், பூனையுடன் எல்லாம்”... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் கதறிய பிரபல நடிகரின் மனைவி
பாலிவுட் நடிகர் ஜிம் கம்மிங்ஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் அவரது மனைவி.
லண்டன்: விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணையில், தன் கணவரான ஹாலிவுட் நடிகர் ஜிம் கம்மிங்ஸ் மீது அதிர்ச்சி தரும் பல பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் அவரது மனைவி.
ஹாலிவுட்டின் பிரபல பின்னணி குரல் தருபவர் ஜிம் கம்மிங்ஸ். உலகளவில் பிரபலமான பல ஹாலிவுட் படங்களுக்கு இவர் டப்பிங் பேசியுளார். பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரமான வின்னி தி பூ-வுக்கு டப்பிங் பேசியதன் மூலம் பிரபலமானவர். அதோடு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இவருக்கும், இவரது மனைவி ஸ்டெஃபானியும் கடந்த 2011ம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஜிம் கம்மிங்ஸை தான் விவாகரத்து செய்வதற்கான காரணத்தை தெரிவித்தார் ஸ்டெஃபானி. அதில் அவர், 'ஜிம் கம்மிங்ஸ் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக' தெரிவித்துள்ளார். அதோடு, தனது சம்மதம் இல்லாமல் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும், போதை மருந்துகளை உட்கொண்டு தனது குழந்தைகள் முன்பே தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தங்களது வீட்டில் வளர்ந்து வந்த நாய் மற்றும் பூனைகளுடன் ஜிம் உடலுறவு கொண்டதாகவும், தன்னையும் அவ்வாறு செய்ய வற்புறுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவலை அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்டெஃபானியின் குற்றச்சாட்டுகள் உண்மையானவை தானா என விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்டெஃபானியின் இந்த குற்றச்சாட்டுகளால் ஜிம் கம்மிங்ஸ்-ன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











