1.2 மில்லியன் டாலர் கொரோனா நிதி.. வீடு இல்லாம வாடும் ஏழைகளுக்கு வழங்கிய ஹாரிபாட்டர் எழுத்தாளர்!

இங்கிலாந்து: பிரபல ஹாரிபாட்டர் நாவலாசிரியர் ஜே.கே. ரவுலிங், இந்த கொரோனா வைரஸ் காலத்தில் வீடுகள் இல்லாமல் தவித்து வரும் ஏழை மக்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.

உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை தலை கீழாக புரட்டிப் போட்டு இருக்கிறது.

JK Rowling donates £1m to help homeless people

தினக் கூலிகள் வேலைக்கு போக முடியாத நிலையில், பசியால் வாடி வருகின்றனர்.

கொரோனா ஒரு பக்கம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்து வரும் நிலையில், மறுபக்கம் அதை விட பயங்கரமான பசி நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.

அரசு நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் உலகளவில் உதவி செய்து வருகின்றனர். சிலர், நேரடியாக மக்களை சென்றடையும் உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் கொரோனா நிதியாக 1.2 மில்லியன் டாலர் நிதியை வீடுகளை இழந்து வாடும் ஏழை மக்கள் மற்றும் Domestic abuse காரணமாக பாதிக்கப்படும் பெண்களுக்கும் வழங்க முன் வந்துள்ளார்.

தான் எழுதிய Battle of Hogwarts நாவலின் 22வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடிய எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங், இறந்த கதாபாத்திரங்கள் குறித்து, இங்கே நான் எதையும் பேசப் போவதில்லை. என்னால் இயன்ற உதவிகளை இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் எப்படி செய்ய முடியும், என்ன செய்யலாம் என்றே ஆலோசித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

ஜே.கே. ரவுலிங்கின் இந்த தாராள மனசையும், கொடை உள்ளத்தையும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X