ஹாலிவுட் காமெடி நடிகை ஜோன் ரைவர்ஸ் காலமானார்
நியூயார்க்: ஹாலிவுட் காமெடி நடிகை ஜோன் ரைவர்ஸ் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 81.

அமெரிக்க காமெடி நடிகையாக தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கியவர் ஜோன் ரைவர்ஸ். அதனைத் தொடர்ந்து டிவி நடிகை, கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என தனது திறமைகளை நிரூபித்தார்.
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜோன், சுயநினைவை இழந்து கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பில் அவர் உயிரிழந்தார்.
மறைந்த கோனுக்கு மெலிசா ரைவர்ஸ் என்ற ஒரு மகள் உள்ளார். தனது தாயாரின் இறப்பு குறித்து மெலிசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது மிகவும் வருத்தத்திற்குரிய தகவல் ஆகும். தன் வாழ்நாளில் மற்றாவர்களை மகிழ்விப்பதே தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தவர் ஜோன். தனது மறைவிற்குப் பிறகும் நாம் விரைவில் மகிழ்ச்சிக்கு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











