ஜான் விக் பட நடிகர் Lance Reddick உயிரிழப்பு... படம் ரிலீஸாகும் முன்பு இப்படியொரு அதிர்ச்சியா..?
லாஸ் ஏஞ்சல்ஸ்: கீனு ரீவ்ஸ் நடித்துள்ள ஜான் விக் சேப்டர் 4 திரைப்படம் அடுத்த வாரம் 24ம் தேதி ரிலீஸாகிறது.
ஜான் விக் சீரிஸ்ஸின் 4 பாகங்களிலும் பிரபல ஹாலிவுட் நடிகர் Lance Reddick நடித்துள்ளார்.
ஜான் விக் சேப்டர் 4 அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், Lance Reddick உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Lance Reddick லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டியில் இயற்கையான முறையில் உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. அவருக்கு வயது 60.

ஜான் விக் ரிலீஸாகும் முன் சோகம்
ஹாலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜான் விக் 4, வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திய ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜான் விக் 4ம் பாகத்தில், கீனு ரீவ்ஸ், லான்ஸ் ரெடிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜான் விக் சீரிஸின் 4 பாகங்களிலும் நடித்த பெருமை கீனு ரீவ்ஸ், லான்ஸ் ரெடிக் இருவருக்கும் உண்டு. இந்நிலையில், ஜான் விக் சேப்டர் 4 ரிலீஸாகும் முன்னரே லான்ஸ் ரெடிக் உயிரிழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

லான்ஸ் ரெடிக் மறைவுக்கு இரங்கல்
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்த லான்ஸ் ரெடிக், இயற்கையான முறையில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வெளியாகும் ஜான் விக்: சேப்டர் 4 படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்று வந்தார். கடந்த வாரம் கூட ஜான் விக் ஹீரோ கீனு ரீவ்ஸ் உடன் இணைந்து பேட்டி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெறும் பிரீமியரில் ஷோவில் மட்டும் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவு செய்திருந்தார். இந்நிலையில், லான்ஸ் ரெடிக் மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹாலிவுட்டின் தனிப்பெரும் கலைஞன்
நடிகர் Lance Reddick ஜான் விக் மட்டுமின்றி Resident Evil, The Wire, Lost, Bosch உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வயர் க்ரைம் த்ரில்லர் டிராமாவாக உருவானது. இதில், செட்ரிக் டேனியல் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்து ஹாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானார் லான்ஸ் ரெடிக்.

மறக்க முடியாத முதல் அங்கீகாரம்
ஹாலிவுட்டில் கறுப்பின நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத காலக்கட்டத்தில், தி வயர் டிராமாவில் லான்ஸ் ரெடிக் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஒரு முறை பேசியிருந்த லான்ஸ் ரெடிக், தி வயர் சீரிஸில் நடித்து முடித்த பின்னர் தான் அது சாதாரண அனுபவம் அல்ல என்பதை உணர்ந்தேன். பின்னோக்கிப் பார்த்தால், அது அவ்வளவு எளிதானது இல்லை என்பதை புரிந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார். சயின்ஸ் பிக்ஷன் ஜானர் படங்களில் அதிகம் விரும்பி நடித்து வந்த லான்ஸ் ரெடிக் திடீரென உயிரிழந்தது ஹாலிவுட் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











