நீங்க ஜாக் ஸ்பாரோ ரசிகரா?: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி
நியூயார்க்: பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் இருந்து ஜானி டெப் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக நடித்தவர் ஜானி டெப். ஜாக் ஸ்பாரோ என்றால் டெப், டெப் என்றால் ஜாக் ஸ்பாரோ என்று சொல்லும் அளவுக்கு இருந்தது.

இந்நிலையில் பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் படங்களில் இருந்து ஜானி டெப் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து டிஸ்னி ப்ரொடக்ஷனின் தலைவர் ஷான் பெய்லி கூறியதாவது, பைரட்ஸ் ஆப் தி கரிபியன் சீரிஸில் புதிய எனர்ஜியை கொண்டு வர விரும்புகிறோம் என்றார்.
டெட்பூல் வெற்றியை அடுத்து எழுத்தாளர்கள் ரெட் ரீஸ், பால் வெர்னிக் ஆகியோர் பைரட்ஸ் ஆப் தி கரிபியன் சீரிஸுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டு வெளியான டெட் மென் டெல் நோ லைஸ் தான் டெப் நடிப்பில் வெளியான கடைசி பைரட்ஸ் ஆப் தி கரிபியின் சீரிஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அக்டோபர் மாதம் திரைக்கதை எழுத்தாளர் ஸ்டூவர்ட் பீட்டீ கூறியதாவது,
ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் டெப் சிறப்பாக நடித்தார். அந்த கதாபாத்திரம் அவருடையதாகவே ஆனது. அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே இது தான் பிரபலம் ஆனது. உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு டெப்பை கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக பிடித்திருந்தது. அந்த கதாபாத்திரத்தில் அவர் 5 முறை நடித்துவிட்டார் என்றார்.


Click it and Unblock the Notifications











