twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜானி டெப்புக்குப் பாதி கண் தெரியாதாமே...!

    By Sudha
    |

    லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஜானி டெப் தனது இடது கண்ணில் பிறவியிலிருந்தே பார்வைக் குறைபாடு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

    ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் முக்கியமானவர் ஜானி டெப். ஏராளமான இளம் பெண்களை ரசிகைகளாகக் கொண்டவர் டெப்.

    அடிக்கடி கண்ணாடியுடன் காணப்படுவார் டெப். இதற்கான காரணத்தை தற்போது போட்டு உடைத்துள்ளார். அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக வந்துள்ளது. அதாவது டெப்புக்கு இடது கண்ணில் பார்வைக் குறைபாடு உள்ளதாம். பிறவியிலிருந்தே இது இருக்கிறதாம்.

    இடது கண் தெரியாது

    இடது கண் தெரியாது

    டெப்புக்கு கிட்டத்தட்ட இடது கண் பார்வை முற்றிலும் இல்லையாம்.ஓரளவுதான் அவரால் இடது கண்ணில் பார்க்க முடியுமாம்.

    பிறவியிலிருந்தே

    பிறவியிலிருந்தே

    பிறவியிலிருந்தே இந்தப் பார்வைக் குறைபாடு பிரச்சினை டெப்புக்கு உள்ளதாம்.

    வலது கண்ணிலும்

    வலது கண்ணிலும்

    அதேபோல வலது கண்ணிலும் கூட டெப்புக்குப் பிரச்சினை உள்ளாம். இருப்பினும் கண்ணாடி போட்டுக் கொண்டு தனது பார்வைக் குறைபாட்டை இத்தனை காலமாக சமாளித்து வந்துள்ளாராம் டெப்.

    எல்லாமே மங்கல்தான்

    எல்லாமே மங்கல்தான்

    டெப்புக்கு கண் பார்வை முழுமையாக இல்லையாம். எல்லாமே மங்கலாகத்தான் தெரியுமாம். கண்ணாடி இல்லாமல் அவரால் சகஜமாக இருக்க முடியாதாம்.

    ஒருபோதும் சரியாக பார்த்ததில்லை

    ஒருபோதும் சரியாக பார்த்ததில்லை

    50 வயதாகும் டெப் தனது பார்வைத் திறன் குறித்துக் கூறுகையில், எனக்கு எப்போதுமே மங்கலாகத்தான் தெரியும். ஒருபோதும் நான் தெளிவாக எதையும் பார்த்ததில்லை என்கிறார்.

    எதிரில் நிற்பவர் யார்...

    எதிரில் நிற்பவர் யார்...

    படப்பிடிப்பின்போது தனக்கு எதிரில் நிற்பவர் மிக அருகில் இருந்தால்தான் அவரால் தெளிவாகப் பார்க்க முடியுமாம். இல்லாவிட்டால் சரியாக தெரிய மாட்டாராம்.

    பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்

    பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்

    புகழ்பெற்ற பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் நாயகன் டெப். பல புகழ் பெற்ற படங்களிலும் நடித்தவர் இவர்.

    English summary
    Actor Johnny Depp, who often sports tinted glasses, has revealed he has been "basically blind as a bat" in his left eye. He ha said he suffers the problem since birth. He is also near-sighted in his right eye and says he relies heavily on his prescription spectacles for his vision.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X