Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அம்பலமானதா அம்பெர் ஹெர்ட் லீலை?.. தங்கச்சியை அப்படி தாக்கிய வீடியோ ஆதாரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
இங்கிலாந்து: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் ஜானி டெப்பின் வழக்கு நீதிமன்றத்தில் சூடு பிடித்து வருகிறது.
நேற்று, தனது சகோதரி தன்னை ஒரு போதும், தாக்கியதே இல்லை என பொய் சாட்சி சொல்லி இருந்த நிலையில், அம்பெர் ஹெர்ட், அவரது தங்கை, விட்னி ஹென்ரிக்ஸை தாக்கும் வீடியோ ஒன்றை ஜானி டெப் தரப்பு நீதிமன்றத்தில் சாட்சியமாக அளித்துள்ளது.
மேலும், சில தினங்களுக்கு முன்னதாக தனது தங்கைக்கு மொபைல் மூலமாக ஆம்பெர் ஹெர்ட் அனுப்பிய மெசேஜ் குறித்த தகவலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நடிப்பும்
பொறுப்பும்..
'தில்
தோட்
கே'
இசை
ஆல்பம்
மூலம்
டிரெண்டான
ஐஏஎஸ்
அதிகாரி..
ரசிகர்கள்
வாழ்த்து!

படத்திலிருந்து நீக்கம்
மீ டூ குற்றச்சாட்டு ஹாலிவுட்டில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கிய நிலையில், தனது கணவர் ஜானி டெப், தன்னை காட்டு மிராண்டித் தனமாக தாக்கினார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த நடிகை அம்பெர் ஹெர்டின் குற்றச்சாட்டு எதிரொலியால், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் அடுத்த பாகத்தில் ஜானி டெப் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு பறிபோனது.

அவ தான் அடிச்சா
நான் அடிக்கவில்லை. அவள் தான் என்னை பல முறை தாக்கினாள், என் கை விரலை துண்டித்தாள், முகத்தில் குத்தினாள் என பதிலுக்கு ஜானி டெப்பும் தனது தரப்பு விவாதத்தை நீதி மன்றத்தில் முன் வைத்து வருகிறார். கடந்த 14 நாட்களாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வரும் இவர்களின் வழக்கு நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது.

வெடிகுண்டு போல
பல முறை தன் மேல் ஜானி டெப் பாட்டில்களை தூக்கியடித்து தாக்கினார் என்றும், அதனால், ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படங்களையும் நடிகை அம்பெர் ஹெர்ட் சமீபத்தில் நீதிமன்றத்தில் சாட்சியமாக அளித்தார். மேலும், ஒவ்வொரு முறையும் அவர் பாட்டில்களை தூக்கி அடிக்கும் போதும், கையெறி குண்டுகளை தன் மேல் வீசுவதாக தான் உணர்ந்ததாக பரபரப்பு வாக்குமூலத்தையும் கொடுத்துள்ளார்.

சாட்சி சொன்ன சகோதரி
அம்பெர் ஹெர்ட் தன்னை ஒரு போதும் தாக்கியதே இல்லை என்றும், அவர், கோபப்பட்டு தான் பார்த்ததே இல்லை என்றும், ஜானி டெப் தான் தனது சகோதரியை பல முறை தாக்கினார் என்றும் நேற்று நீதிமன்றத்தில் அம்பெர் ஹெர்டின் சகோதரி விட்னி ஹென்ரிக்ஸ் சாட்சியம் கொடுத்திருந்தார்.

பொய் சாட்சி
இந்நிலையில், ஜானி டெப்பின் வழக்கறிஞர், அம்பெர் ஹெர்ட் சகோதரி கொடுத்தது முற்றிலும் பொய் சாட்சி என்றும், அவரை கண்டபடி நடிகை அம்பெர் ஹெர்ட் தாக்கி, உடல் முழுக்க காயங்கள் வரவழைத்த வீடியோவை இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வீடியோ ஆதாரத்துடன் சமர்பித்துள்ளனர். அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மொபைலுக்கு மெசேஜ்
இந்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், யாரும் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், பொய்யாக சாட்சிகளை ஜோடிக்கவோ, மிரட்டவோ கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், சில தினங்களுக்கு முன்னதாக தனது சகோதரிக்கு ரகசியமாக ஆம்பர் ஹெர்ட் மெசேஜ் அனுப்பிய தகவலையும் ஜானி டெப் வழக்கறிஞர் கோர்ட்டில் சமர்பித்துள்ளார். பிரபல ஹாலிவுட் ஜோடியின் இந்த வழக்கு எங்கு போய் முடியப் போகுது என்பதை அறிய பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.