»   »  அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்

அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒரு நடிகர் அதிபரை கொலை செய்து ரொம்ப வருஷமாகிவிட்டது, அதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்.

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் பட புகழ் நடிகர் ஜானி டெப் கிளாஸ்டன்பரி திருவிழாவில் கலந்து கொண்டார். தன்னுடைய படமான தி லிபெர்டினை அந்த திருவிழாவில் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

Johnny Depp talks about assassinating president

நிகழ்ச்சியில் அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ஒரு நடிகர் அதிபரை கொலை செய்து பல காலம் ஆகிவிட்டது. அதிபரை நடிகர் கொலை செய்வதற்கான காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் என்று கூறி சிரித்தார்.

ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலருக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டாலே பிடிக்காது. ஆஸ்கர் விருது விழாவில் கூட டிரம்பை கிண்டலடித்தனர். இந்நிலையில் டெப் இவ்வாறு கூறியுள்ளார்.

நடிகர் ஜான் வில்க்ஸ் பூத் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கடந்த 1865ம் ஆண்டு கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hollywood actor Johnny Depp said that it has been a while since an actor assassinated a president and may be it's time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil