வர்றாரு ஜாக் ஸ்பாரோ.. அனிமேஷன் தொடரின் முன்னணி கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுக்கும் ஹாலிவுட் ஹீரோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், அனிமேஷன் தொடருக்கு பின்னணி குரல் கொடுக்க உள்ளார்.
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்களில், கேப்டன் ஜாக் ஸ்பாரோ கேரக்டரில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்.

டெட்மேன், த அஸ்ட்ரானட்'ஸ் வொய்ப், ஸ்லீப்பி ஹாலோவ், சீக்ரெட் விண்டோ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
ஜானி டெப்புக்கு 55 வயது ஆகிறது. இவர் ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அம்பர் ஹெர்ட் தன்னை தாக்கியதாகவும் அவரால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஜானி டெப், பஃபின்ஸ் (Puffins) என்ற அனிமேஷன் தொடரின் முன்னணி கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுக்க இருக்கிறார். இந்த தொடர் 250 எபிசோட்களை கொண்டது. இதற்காக இந்த தொடரை தயாரிக்கும் இயர்வோலினோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிறுவனம் தயாரித்த, வெயிட்டிங் பார் த பார்பரியன்ஸ் என்ற படத்தில் ஜானிடெப் ஹீரோவாக நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











