ஜோக்கர் திரைப்படத்திற்கு எத்தனை ஆஸ்கர் கிடைக்கும்.. ஒரு பிரெடிக்ஷன் ரிப்போர்ட்!
ஹாலிவுட் திரைத்துறை கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அகாடமி விருது ஆஸ்கர் தனது விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இதில் 20 சினிமா துறைக்கான விருதுகள் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து வழங்கப்படும். பல படங்கள் இதற்கான போட்டியில் இருந்தன. அதில் பல படங்கள் கடைசி ரவுண்ட் சென்று திரும்பின தற்போது கடைசி கட்டத்தில் நாமினேட் செய்யப்பட்ட படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த வருடம் வெளியாகி உலக சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஜோக்கர் திரைப்படம் சுமார் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஒரு திரைப்படம் ஆஸ்கர் நாமினேசனில் அதிகம் இடம் பெற்றது ஜோக்கர் தான். இப்படத்தில் நடித்த ஜாக்குயின் பினிக்ஸ் இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருதை கண்டிப்பாக பெறுவார் என்று பலரால் சொல்லப்படுகிறது.
இதற்கு அடுத்த படியாக குவிண்டன் டரன்டினோ இயக்கிய ஒன்ஸ் அப் ஆன்ய டைம் இன் ஹாலிவுட் திரைப்படம் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இதில் நடித்த லியானார்டோ டிகேப்ரியோ ஆஸ்கர் விருதை பல முறை பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

தி ஜரிஷ் மேன் மற்றும் 1917 படம் ஆகியவையும் 10 பிரிவுகளின் கீழ் நாமினேட் ஆகியுள்ளன. நாமினேசன் செய்யப்பட்ட படங்களே இவ்வளவு இதில் எந்த படம் எந்த துறையில் என்ன விருது பெறப்போகிறது என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், ஜோக்கர் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவப்பட்ட கதை என மொத்தம் 6 முதல் 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
92வது ஆஸ்கர் விருது விழா வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் கடந்த ஆண்டை போல ஆஸ்கர் விருது விழா நடைபெறும் என அதனை ஒளிபரப்பும் ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











