ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸின் சகோதரி மர்ம சாவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகையான ஜூலியா ராபர்ட்ஸ்ன் சகோதரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சமீபகாலமாக பிரபலங்களின் மரணங்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்ன் ஒன்று விட்ட சகோதரியின் மரணமும் சேர்ந்துள்ளது.

கடந்த ஞாயிறன்று நீர் நிரம்பிய குளியல் அறைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஜூலியாவின் சகோதரி உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அவரது மரணம் தற்கொலையா அல்லது விபத்தா எனப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜூலியாவின் சகோதரி...

ஜூலியாவின் சகோதரி...

அமெரிக்காவில் வசித்து வருபவர் பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபெர்ட்ஸ்(46). ஆஸ்கார் விருது பெற்ற இவருடைய சகோதரர் எரிக் என்பவரும் பிரபல நடிகரே. இவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரியான நான்சி மோடிஸ் (37) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார்.

கடைசிக் கடிதமா?

கடைசிக் கடிதமா?

நான்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலுள்ள குளியல் அறை தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டார். நான்சியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதற்கிடையே வீட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளார்கள்.

தற்கொலையா..?

தற்கொலையா..?

அதிகளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் நான்சி மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ஆனால், அதிக அளவு மாத்திரைகளை தற்கொலை செய்து கொள்வதற்காக நான்சி உட்கொண்டாரா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூலியா அதிர்ச்சி....

ஜூலியா அதிர்ச்சி....

நான்சியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க 8 வாரம் முதல் 10 வாரம் ஆகலாம். அதன்பிறகே நான்சியின் சாவு குறித்த மர்மம் அகலும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நான்சியின் மரணம் தங்களுக்கு பெரிய அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக நடிகை ஜூலியா, நடிகர் எரிக் மற்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X