»   »  சிறுவர்களுக்கான 3டி படமாக மாறியது... தூர்தர்ஷனின் 'ஜங்கிள் புக்'

சிறுவர்களுக்கான 3டி படமாக மாறியது... தூர்தர்ஷனின் 'ஜங்கிள் புக்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: இந்தியாவில் தோன்றிய ஜங்கிள் புக் கதையை, மிகப்பெரிய பொருட்செலவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் படமாக்கியுள்ளது.

இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்டு கிப்ளிங் என்பவர் தான் இந்த ஜங்கிள் புக் கதையின் ஆசிரியர்.

தூர்தர்ஷனில் வெளியாகி சிறுவர்களை மிகவும் கவர்ந்த இத்தொடரை, தற்போது திரைப்படமாக வால்ட் டிஸ்னி உருவாக்கியிருக்கிறது.

ஜங்கிள் புக்

ஜங்கிள் புக்

தூர்தர்ஷனில் வெளியாகி அக்கால சிறுவர்களின் விருப்பமான கார்ட்டூன் தொடராக இருந்த ஜங்கிள் புக், தற்போது 3D திரைப்படமாக உருவெடுத்துள்ளது. 'அயர்ன் மேன்' புகழ் ஜான் பவ்ரியூ இயக்கியுள்ள இப்படத்தை, மிகுந்த பொருட்செலவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

குழந்தைகளுக்கான

குழந்தைகளுக்கான

அடர்ந்த காட்டிற்குள் தனியாக விடப்பட்ட சிறுவனை விலங்குகள் எடுத்து வளர்க்கும். அவ்வாறு வளரும் சிறுவனை புலி ஒன்று கொல்ல முயல, மற்ற விலங்குகள் புலியிடம் இருந்து சிறுவனைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. சிறுவனின் பெயர் மோக்லி, புலியின் பெயர் ஷேர்கான், சிறுதையின் பெயர் பகீரா என்று இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும்.

இந்திய வம்சாவளி

இதில் நடித்திருக்கும் சிறுவன் நீல் சேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒரே மனிதன் நீல் மட்டும் தான். மற்ற விலங்குகளை அனிமேஷன் முறையில் உருவாக்கியுள்ளனர்.

பாலிவுட் நட்சத்திரங்கள்

பாலிவுட் நட்சத்திரங்கள்

படத்தின் கதாபாத்திரங்களுக்கு பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கின்றனர். நானா படேகர் புலிக்கும், பிரியங்கா சோப்ரா கரடிக்கும், ஓம் பூரி கருஞ்சிறுத்தைக்கும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தியாவில்

இந்தியாவில்

வருகின்ற ஏப்ரல் 16 ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. ஆனால் இந்தியாவில் ஒருவாரம் முன்னதாக ஏப்ரல் 8 ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அந்தந்த மொழிகளில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதனால் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் இப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.

மொத்தத்தில் ஜங்கிள் புக் சிறுவர்களுக்கான கோடை விருந்து....

English summary
Jungle Book Cartoon Movie to be released in India on April 8.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos