ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனின் மிரட்டலான ட்ரெயிலர்...அடுத்த சூப்பர் அனுபவத்துக்கு தயாராகும் ரசிகர்கள்

சென்னை : டைனோசர்களை மையமாக வைத்து வெளியாகிவரும் ஜுராசிக் வேர்ல்ட் படவரிசையில் அடுத்ததாக ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படம் வெளியாகவுள்ளது.

மனிதர்களும் டைனோசர்களும் ஒன்றாக வாழ முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஜுராசிக் வேர்ல்ட் படங்கள்

ஜுராசிக் வேர்ல்ட் படங்கள்

ஜுராசிக் வேர்ல்ட் படங்களின் வரிசையில் தற்போது ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படம் உருவாகியுள்ளது. இந்தப் படங்களின் மிரட்டலான அனுபவத்திற்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 1993ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான ஜுராசிக் பார்க் அந்த வகை படங்களுக்கு மக்களை காத்திருக்க செய்து வருகிறது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வரிசை படங்களை மிகவும் என்ஜாய் செய்து வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து தி லாஸ்ட் வேர்ல்ட் : ஜுராசிக் பார்க், ஜுராசிக் பார்க் 3 போன்ற படங்கள் வெளியான நிலையில் கடந்த 2015 முதல் ஜுராசிக் வேர்ல்ட் படங்கள் வெளியாகி வருகின்றன.

ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படம்

ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படம்

இந்நிலையில் டைனோசர்கள் மற்றும் டைனோசர்களின் முடிவு என்ற தலைப்பில் தற்போது ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ஜுன் 10ம் தேதி உலகளவில் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழிலும்தான்.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது. வெளியாகி இரு தினங்களிலேயே 1.3 கோடி வியூஸ்களை இந்த ட்ரெயிலர் தற்போது பெற்றுள்ளது. தமிழிலும் இந்த ட்ரெயிலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மனிதர்கள் + டைனோசர்கள்

மனிதர்கள் + டைனோசர்கள்

இந்தப் படத்தில் முதன்முதலாக வெளியான ஜுராசிக் பார்க் படத்தில் நடித்த சாம் நீல், ஜெஃப் கோல்ட்பிளம், லாரா டெர்ன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. மனிதர்களும் டைனோசர்களும் ஒன்றாக வாழ முடியாது என்ற அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X