Justin Bieber Baby: ஆண் குழந்தைக்கு அப்பாவான ஜஸ்டின் பீபர்.. என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறு வயதில் இருந்தே பாடல்களை பாடி உலகளவில் பிரபலமான ஜஸ்டின் பீபர் தனது 30வது வயதில் அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். ஆகஸ்ட் 23ம் தேதி இந்த அறிவிப்பை தனது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அறியும்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஜஸ்டின் பீபர் அப்பாவான நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களுக்கு திருமணம் ஆகி வருகிறது. மேலும், புதிதாக நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என பல சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால் சமீபத்தில் தாயானார். நடிகை தீபிகா படுகோன் அடுத்த மாதம் குழந்தையை பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், திருமணம் நடைபெற்ற இந்திரஜா சங்கரூம் கருவுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாடகர்: ஜஸ்டின் பீபரையே ரசிகர்கள் குழந்தை பாடகராக உலகம் முழுவதும் கொண்டாடி வந்தனர். 1994ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கனடாவில் பிறந்த ஜஸ்டின் பீபர். 2010ம் ஆண்டு 16 வயதில் அவருடைய மை வேர்ல்ட் ஆல்பம் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பிலீவ், பர்போஸ், லவ் யுவர்செல்ஃப், சாரி, ஐ எம் தி ஒன், ஸ்டே என ஏகப்பட்ட ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார்.
திருமணம்: சில பாடகிகளுடனும் நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டு வந்த ஜஸ்டின் பீபர் அமெரிக்க மாடல் நடிகையான ஹெய்லி பால்ட்வின் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகள் திருமண வாழ்க்கையையும் தங்கள் காதல் வாழ்க்கையையும் கொண்டாடி வந்த இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து தற்போது பெற்றோர்களாக மாறியுள்ளனர்.
ஆண் குழந்தை: ஆகஸ்ட் 23ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பாடகர் ஜஸ்டின் பீபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பாதங்களை மட்டும் காட்டியபடி போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதே புகைப்படத்தை அவரது மனைவியும் போஸ்ட் செய்ய இருவரது பெற்றோர்களும், ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை தூவி வருகின்றனர்.
என்ன பெயர்: ஜஸ்டின் பீபர் தனது மகனுக்கு JACK BLUES BIEBER (ஜேக் ப்ளூஸ் பீபர்) என்கிற பெயரை சூட்டியிருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஜேக் ப்ளூஸ் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











