பிகினியில் இங்கிலாந்து ராணி முகம்.. ஹாலிவுட் நடிகை செய்த குசும்பு வேலை.. விளாசும் ரசிகர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேலின் க்ரீன் ஸ்க்ரீன் பிகினியில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவத்தை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.

Recommended Video

The Royal Wedding | இளவரசர் ஹாரி திருமணம் | திருமணத்தில் பிரியங்கா சோப்ரா

ஒன் அகைன்ஸ்ட் தி விண்ட் படத்தின் மூலம் 1991ம் ஆண்டு ஹாலிவுட்டில் நடிகையான அறிமுகமானவர் கேட் பெக்கின்சேல்.

உலகப் புகழ்பெற்ற பியர்ல் ஹர்பர், வான் ஹெல்சிங், அண்டர்வேர்ல்ட் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக இவர் நடித்துள்ளார்.

கேட் பெக்கின்சேல்

கேட் பெக்கின்சேல்

பியர்ல் ஹர்பர், வான் ஹெல்சிங், அண்டர்வேர்ல்ட், டோட்டல் ரீகால், லவ் அண்ட் பிரெண்ட்ஷிப், ஜோல்ட் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தியவர் பிரபல ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல். பிகினி உடையில் வித்தியாசத்தை படைக்க வேண்டும் என இவர் தற்போது செய்த விஷயம் பெரும் பிரச்சனையை கிளப்பி உள்ளது.

க்ரீன் ஸ்க்ரீன் பிகினி

க்ரீன் ஸ்க்ரீன் பிகினி

க்ரீன் மேட்டில் எப்படி பேக்ரவுண்ட்டை மாற்றுகின்றனரோ அதே போல பிகினி உடையிலும் புதுமையை கொண்டு வரலாம் என நினைத்த கேட் பெக்கின்ஸ்லே க்ரீன் ஸ்க்ரீன் பிகினியை அணிந்து கொண்டு அதில், பல டிசைன்களை கொண்டு வந்து ஒட்டுமொத்த ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

பிகினியில் இங்கிலாந்து ராணி

பிகினியில் இங்கிலாந்து ராணி

நாய், நரி, மினியன்ஸ், கேட் பெக்கின்ஸ்லே நடித்த அண்டர்வேர்ல்ட் படத்தின் போஸ்டர் என பல விஷயங்கள் அவரது பிகினியில் இடம்பெற்ற நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் புகைப்படத்தையும் வைத்தபடி போஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இப்படியா அவமானப்படுத்துவது

இப்படியா அவமானப்படுத்துவது

இங்கிலாந்து நாட்டின் ராணியை இப்படியா அவமானப்படுத்துவது என இங்கிலாந்து நாட்டின் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகையின் ஐடியா புதுசா இருந்தாலும், எதை கொண்டு போய் எங்க வைக்கிறதுன்னு ஒரு விவஸ்த்தையே இல்லையே என்றும் பெரியவர்களுக்கு மரியாதை என்பதே இல்லையா? என்றும் கேள்விகளை எழுப்பி கேட் பெக்கின்ஸ்லேவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பாஃப்டா விருது கிடைக்காது

பாஃப்டா விருது கிடைக்காது

இங்கிலாந்து நாட்டில் சிறந்த நடிகர்களுக்கு வழங்கப்படும் பாஃப்டா உள்ளிட்ட உயரிய விருதுகளை கேட் பெக்கின்ஸ்லே இனி மறந்து விட வேண்டியது தான் என்றும், அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அப்படி ஒரு போட்டோவை பிகினியில் வர வைத்து போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X